TamilSaaga

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு முயற்சிக்கு ஆதரவு – 5,00,000 வெள்ளி அளிக்கும் Maybank வங்கி

சிங்கப்பூரில் சமூக மேம்பாட்டு மன்றம்களுடன் இணைந்து தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் மேற்கொண்டுவரும் வேலைவாய்ப்பு முயற்சிகளுக்கு தங்களது ஆதரவை அளிக்கும் வகையில் சுமார் 5,00,000 வெள்ளியை ஒதுக்குவதாக ‘மேபேங்க்’ வங்கி தெரிவித்துள்ளது.

அவற்றுக்கான முதல் வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து நிறுவன சேவைகள், தளவாடம் ஆகிய துறைகளைச் சேர்ந்த மொத்தம் 11 நிறுவனங்கள் இன்றைய வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கின்றனர்.

தொழிலாளர்கள் நிர்வாகிகள் மற்றும் கீழ்நிலை ஊழியர்கள் ஆகியோருக்கான ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெறுகின்றது.

வடகிழக்கு சமூக மேம்பாடு மன்ற மேயர் டெஸ்மாண்ட் இந்த முகாமை பார்வையிட்டார். மேலும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் இடம்பெற்றுள்ள வேலைகளில் சராசரி சம்பளம் இரண்டாயிரம் வெள்ளி முதல் 3000 வெள்ளிக்கு இடைப்பட்டதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

Related posts