TamilSaaga

நூற்றாண்டு காலம் சிறப்புமிக்க சிங்கப்பூர் ஸ்ரீ சிவ துர்கா ஆலயம் – அற்புத வரலாறு

சிங்கப்பூரில் பொத்தோங் பாசீர் என்ற இடத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற அற்புத ஸ்ரீ சிவ துர்கா ஆலயம்.

கருவறை, பிரகாரம், இராஜ கோபுரம், அர்த்த மண்டபம் போன்ற பல சாஸ்திரமுறைப்படு அமைந்திருக்கும் ஒரு முக்கிய கோயிலாக உள்ளது.

கோயில் வரலாறு:
சிங்கப்பூர் ஸ்ரீ சிவதுர்கா கோயிலானது நூற்றாண்டு காலம் பழமை வாய்ந்த கோயிலாகும். துவக்கத்தில் ரூமா மிஸ்கின் என்ற இடத்தில் கோயில் அமைந்திருந்தது. அது காவல்துறை வசிப்பு பகுதி என்றதால் பிறகு ஜார்ஜஸ் சாலைக்கு மாற்றப்பட்டது.

1962 ஆம் ஆண்டு மன்மதன் கோயில் என்ற பெயரில் உரிமம் பெற்று புதிய அமைப்புடன் கோயில் கட்ட நிர்வாகக் குழு திட்டமிட்டது.

அப்போது தர்மகர்த்தாவாக இருந்த திரு. கோபால்சாமி தன் சொந்த செலவில் துர்கையம்மனுக்கு சிலை வடிவமைத்து கோயிலில் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகமும் நடத்தினார்.

நகர மறுசீரமைப்பு மற்றும் வீடுகளுக்காக அரசுக்கு நிலம் தேவைப்பட்டதால் தற்போதுள்ள பொத்தோங் பாசிர் பகுதியில் உள்ள 1000 சதுர மீட்டர் அளவுள்ள நிலத்தை சுமார் 2,80,000 வெள்ளி கொடுத்து வாங்கப்பட்டது. பின்பு அந்த இடத்திலேயே 1983 ஆம் ஆண்டு வேதங்கள் முழங்க மந்திரங்கள் ஓத சிவ துர்கை சிலை பால பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கோயில் சிறப்பு
இந்த கோயிலின் பிரதான தெய்வமாகிய சிவ துர்கை தெற்கில் அமர்ந்து வடக்கு பார்க்கும் வண்ணத்தில் அமைந்துள்ளார்.

இங்கு விஷேசமாக ராகுகால துர்கா பூஜை நடைபெறுகிறது. அதுமட்டுமன்றி இந்த கோயிலில் நடைபெறும் விளக்கு பூஜை பெண்கள் மத்தியில் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு விழாவாகும்.

Related posts