TamilSaaga

Breaking: செம மாஸ்! சிங்கப்பூருக்கு “Airbus A 321 neo” எனும் பிரம்மாண்ட விமானங்களை இயக்கும் Fly Scoot – திருச்சியில் இருந்து மார்ச் 27 முதல் “டக்கர்” பயணம் ரெடி!

Fly Scoot நிறுவனமானது வரும் மார்ச் 27ம் தேதி முதல் திருச்சி, சிங்கப்பூர் இடையே இவ்வழித்தடத்தில் தினசரி விமான சேவையை வழங்க உள்ளது.

இதில் குறிப்பிடத்தகுந்த தகவல் என்னவெனில், ஏற்கனவே, இயக்கப்படும் 180 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் A 320 விமானத்துக்கு பதிலாக, 232 இருக்கைகள் கொண்ட கொண்ட ஏர்பஸ் A 321 neo விமானத்தை Fly Scoot பயன்படுத்த உள்ளது.

ஏர்பஸ் A 321 neo விமானத்தின் ஸ்பெஷல் என்ன?

A321neo என்பது 180 முதல் 220 பயணிகள் வரை அமரக்கூடிய வசதி கொண்ட விமானமாகும். இன்னும் சொல்லப்போனால் 244 பேர் வரை கூட உட்காரலாம்

மொத்த நீளம் 44.51 மீ
கேபின் நீளம் 34.44 மீ
Fuselage அகலம் 3.95 மீ
அதிகபட்ச கேபின் அகலம் 3.70 மீ
விங் ஸ்பான் (வடிவியல்) 35.80 மீ
உயரம் 11.76 மீ
தடம் 7.59 மீ
வீல்பேஸ் 16.90 மீ

அதிகபட்ச ramp எடை 97.40 டன்கள்
அதிகபட்ச டேக்-ஆஃப் எடை 97.00 டன்கள்
அதிகபட்ச தரையிறங்கும் எடை 79.20 டன்கள்
அதிகபட்ச பூஜ்ஜிய எரிபொருள் எடை 75.60 டன்கள்
அதிகபட்ச எரிபொருள் திறன் 32 940 லிட்டர்

போன்றவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.

வாரத்தில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டும் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு VTL விமான சேவையை Flyscoot வழங்கவுள்ளது. மற்ற நாட்களில் Non- VTL விமான சேவையை வழங்கவுள்ளது. இந்த விமான சேவை நேரடி விமான சேவை ஆகும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts