TamilSaaga

“சிங்கப்பூர் Bishan சாலையில் தீ விபத்து” : மின்விசிறியால் ஏற்பட்ட விபரீதம் – விரைந்து வந்த சிங்கப்பூர் SCDF

சிங்கப்பூரில் பிளாக் 113 பிஷன் தெரு 12-ல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 9) மின்விசிறியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ குறித்து உடனடியாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) மதியம் 1.35 மணி அளவில் இந்த சம்பவம் குறித்து எச்சரிக்கப்பட்டதாகக் SCDF கூறியது. இரண்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டின் வரவேற்பறையில் இருந்த மின்விசிறியில் இருந்து தீ விபத்து ஏற்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூர் Pocari Sweat ஓட்டப்பந்தயம்” – பந்தய தூரத்தை 6.52 நிமிடங்களில் கடந்து அசத்திய ஜீவனேஷ் சௌந்தரராஜா

விரைந்து வந்த SCDF பணியாளர்கள் தீயை அணைத்தனர், மேலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் காயங்கள் எதுவும் இல்லை என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலே உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை நோக்கி அடர்த்தியான, கறுப்பு புகை மேலெழும்பி செல்வதை புகைப்படங்கள் காட்டுகின்றன.

சிங்கப்பூரர்களே உஷார் : “Shopee Pay” என்ற பெயரில் உலா வரும் “மோசடி செயலி” – எச்சரிக்கும் சிங்கப்பூர் போலீஸ்

சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 7) ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நின்ற கார் மீது மோதியதில் வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் அந்த காரின் ஓட்டுநர் தீயில் சிக்கி பரிதாபமாக இறந்த செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் கெயிலாங் காவல் நிலையத்திற்கு அடுத்துள்ள பிளாக் 42 காசியா கிரசென்ட்டில் உள்ள திறந்த வெளி வாகன நிறுத்துமிடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts