TamilSaaga

“இவ்வாண்டு நிதிநிலை அறிக்கை” : மக்களுடன் பகிர்ந்து கொண்ட சிங்கப்பூர் வீரமாகாளியம்மன் கோவில் குழுமம்

சிங்கப்பூர் என்றால் நம் நினைவு வரும் பல இடங்களில் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவிலும் ஒன்று. சிங்கப்பூரின் தெற்கு பகுதியில் லிட்டில் இந்தியாவின் நடுவில் அமைந்துள்ள ஒரு இந்த கோவில் உலக அளவில் புகப்பெற்றது. 1881ம் ஆண்டு இந்த கோவில் கட்டப்பட்டதாக வரலாற்று சுவடுகள் தெரிவிக்கின்றது. சிங்கப்பூரில் தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பிரதிபலிப்பாகவும் இந்த கோவில் பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் இந்த கோவிலின் அறக்கட்டளை தனது வருடாந்திர தணிக்கை நிதி அறிக்கையை மக்களின் பார்வைக்கு தற்போது தனது முகநூல் வழியாக வெளியிட்டுள்ளது.

இந்த நிதி ஆண்டில் நடந்த முக்கிய அம்சங்கள், நிதி அறிக்கை, உறுப்பினர் விவரம், அன்னதானம், தன்னார்வலர்கள் பங்களிப்பு, பராமரிப்பு போன்ற பல விஷயங்கள் குறித்தும் அதற்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்தும் தெளிவான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது அந்த கோவில் நிர்வாகம். அவர்கள் வெளியிட்ட தகவலின் அடிப்படையில்..

வீரமாகாளியம்மன் கோவில் வெளியிட்ட தகவல்

“கடந்த ஆகஸ்ட் 2020ம் ஆண்டு முறையான பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து பக்தர்கள் “பெரியாச்சி பூஜை” நடைபெற்றது. உறுப்பினர் விவகாரங்கள், அரசியலமைப்பு திருத்தங்கள் மற்றும் ஒப்பந்த ஏற்பாடுகள் குறித்து கோவிலுக்கு உதவ சட்ட ஆலோசகரை நியமித்தோம். மேலும் அக்டோபர் 2020ம் ஆண்டு சண்டி யாகம் மற்றும் நவராத்திரி பூஜைகளை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்தினோம். மேலும் நவராத்திரி கலாச்சார நிகழ்ச்சிகளை இணைய வழியாக நடத்தி அதை எங்கள் முகநூல் வழியாக ஒளிபரப்பினோம்”. “அதேபோல CCC இயக்கத்துடன் இணைந்து தீபாவளி பரிசு பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தோம்”.

“நவம்பர் 2020ல் கலாச்சார சமூகம் மற்றும் இளைஞர்கள் மேம்பாட்டு அமைச்சர் எடின் டாங் நமது கோவிலை காண வந்தார். “இந்த ஆண்டு ஜனவரி 2021ம் ஆண்டு 9ம் தேதி புதிய மேலாண்மை குழுவின் தேர்தல் நடைபெற்றது”. மேலும் அர்ச்சனைகள், பூஜைகள், உபயம், நன்கொடை, பிரசாதம் உள்ளிட்ட விஷயங்களில் இருந்து கோவிலுக்கு அளிக்கப்பட்ட நிதி விவரங்களையும் முழுமையாக கோவில் நிர்வாகம் அளித்துள்ளது.

Related posts