TamilSaaga

சிங்கப்பூர் தம்பதிகள் : Lock Down காலத்தில் அதிக அளவில் உடலுறவில் ஈடுபட்டனர் – ஆய்வு முடிவுகளை வெளியிட்ட LKYSPP

சிங்கப்பூரில் கடந்த ஏப்ரல் 2020 முதல் Lock Down (Circuit Breaker) காலத்தில் திருமணமான தம்பதிகள் அதிக அளவில் உடலுறவு கொள்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. அதே போல சர்க்யூட் பிரேக்கர் முடிந்த பிறகும் ஜூன் 2020ல் இந்தப் நிலை தொடர்ந்ததாக ஆய்வின் தரவு காட்டுகிறது. தொற்றுநோய்களின் போது பாலியல் செயல்பாடுகளில் ஒட்டுமொத்த சரிவு சர்வதேச ஆய்வுகளில் காணப்பட்டாலும், சிங்கப்பூர் தம்பதிகளிடையே உடலுறவின் விகிதம் அதிகரித்ததை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் வாழ்க்கையை துவங்க சேமித்து வைத்தோம்” : நொடிப்பொழுதில் களவுபோன 1,20,000 டாலர் – விரக்தியில் தம்பதி

லீ குவான் யூ ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசியின் (LKYSPP) உதவிப் பேராசிரியர் டான் போ லின், சிங்கப்பூரில் திருமணமான 409 பெண்களின் பாலியல் செயல்பாடுகளைக் கண்காணித்து, டிசம்பர் 13, 2021 அன்று வெளியான Journals of Sexual Medicineல் இந்த ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார். “அதிக மன அழுத்த உள்ள சமுதாயத்தில்” இருந்து திருமணமான தம்பதிகளிடையே மன அழுத்தம், சோர்வு மற்றும் பல விஷயங்களை ஆய்வு செய்த டானின் மற்றொரு ஆவணத்திற்காக 2018ல் இந்த பெண்கள் முதன்முதலில் கணக்கெடுக்கப்பட்டனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் திருமணமான தம்பதிகளிடையே பாலியல் செயல்பாடுகளின் விகிதம் மற்றும் முறைகளில் ஏற்படும் மாற்றங்களில் கோவிட்-19 லாக்டவுனின் தாக்கத்தை ஆராய, 2020ம் ஆண்டில் இதேபோன்ற கணக்கெடுப்புகளை மீண்டும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். சிங்கப்பூரில் உள்ள தம்பதிகள் கடந்த 2020ம் ஆண்டில் வாரத்திற்கு சராசரியாக 0.78 முறை உடலுறவில் ஈடுபட்டுள்ளனர், இது 2018ல் ஒரு வாரத்திற்கு சராசரியாக 0.68 முறை என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கூடுதலாக, வாரத்திற்கு ஒரு முறையாவது உடலுறவு கொள்ளாத தம்பதிகளின் சதவீதம் 2018ல் 54.3 சதவீதமாக இருந்த நிலையில், 2020ல் 50 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூரில் வேலை.. ஆனால் தாயகத்தில் வீடு கட்ட NRI Housing Loan பெற முடியுமா? – என்னென்ன ஆவணங்கள் வேண்டும்? Detailed ரிப்போர்ட்

பெரும்பாலான பங்கேற்பாளர்கள் வாரத்திற்கு இரண்டு முறை அல்லது அதற்கு மேல் உடலுறவு கொள்வதை நோக்கி நகர்வதை ஆய்வு கணவனித்தது. இந்த ஆய்வில் கலந்து கொண்ட பெண்கள் திருமணமாகி சராசரியாக ஆறு ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்கேற்பாளர்களின் வயது 25 மற்றும் 34. பங்கேற்பாளர்களின் சராசரி வயது 2018ல் தொடங்கும் போது 30.49 ஆக இருந்தது, மேலும் 2020 இல் சராசரி வயது 32.46 ஆக இருந்தது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts