TamilSaaga

இப்படிகூடவா மோசடி செய்வாங்க? : சிங்கப்பூரில் காந்தத்தை பயன்படுத்தி மோசடி செய்த கும்பல் – 9 பேர் கைது

சிங்கப்பூரில் இரண்டு பதுங்கு குழி டேங்கர்களில் உள்ள மாஸ் ஃப்ளோ மீட்டர்களை, காந்தங்கள் பயன்படுத்தி மோசடி செய்ததாக, ஒரு மோசடி கும்பலை சேர்ந்த ஒன்பது உறுப்பினர்கள் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் வியாபாரிகள் சுமார் US $ 336,930 மதிப்புள்ள கடல் எரிபொருள் எண்ணெய் அளவால் ஏமாற்றப்பட்டதாக அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸ் (AGC), கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) மற்றும் சிங்கப்பூர் போலீஸ் படை (SPF) இன்று வியாழக்கிழமை (செப்டம்பர் 30) வெளியிட்ட ​​ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அங் ஹெங் லை, டே டியன் வுய் மற்றும் கேக் கா ஹுய் ஆகிய மூன்று பேரின் தலைமையின் கீழ் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பங்கர் டேங்கர்களில் செயல்பட்டு வந்த ஆங் ஹெங் சியே, ஸ்டான்லி ஹெங் மெங் வீ, லியோனல் லியோங் வை சூ, ஆண்டி சுவா யூ ஹுய், கப் சுவா யான் ஜிங் மற்றும் கேக் கா ஹீ என்ற ஆறு சரக்கு அதிகாரிகளால் இந்த மோசடி திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த திட்டத்தில் மோசடிக்காரர்கள் தொழில்துறை காந்தங்களைப் பயன்படுத்தி பதுங்கு குழிகளின் டேங்கர்களில் உள்ள மாஸ் ஃப்ளோ மீட்டர் சாதனங்களை சேதப்படுத்தியுள்ளனர்.

வியாபாரிகள், கப்பலுக்கு உண்மையில் வழங்கப்பட்டதை விட அதிக அளவு எரிபொருளை பதிவு செய்ய காரணமாக இந்த காந்தங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த மோசடி கும்பலின் சட்டவிரோத செயல்பாடுகள் கடந்த ஏப்ரல் 2019ல் MPA ஆல் அமலாக்க சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“இதுபோன்ற குற்றச் செயல்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மற்றும் சிங்கப்பூரின் சர்வதேச நற்பெயரை குழைக்கும் இதுபோன்ற குற்றங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டார்கள்” என்று AGC, MPA மற்றும் SPF கூறியது.

Related posts