சிங்கப்பூரில் போலீசாரிடம் தவறான தகவல்களை வழங்கியதாகக் கூறப்படும் 50 வயதுடைய நபர் ஒருவர் தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 30), அவர் தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் தன்னைத் தாக்கி, $2,30,000 ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றதாக காவல்துறையினரிடம் அவர் கூறினார்.
தன்னிடம் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டி சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் செல்வதற்கு முன் அந்த மூவரும் பேஸ்பால் மட்டையால் தன்னை காயப்படுத்தியதாகவும் அந்த நபர் போலீசாரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
ஆனால் அந்த நபர் மீது லேசான சந்தேகம் வந்த நிலையில் அவரை கடுமையாக விசாரிக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை புகாரளிக்கப்பட்ட விதத்தில் அந்த நபருக்கு எந்தவித பொருள் பாதிப்போ அல்லது தாக்கப்படவோ இல்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து காவல்துறை வெளியிட்ட தகவலில் : “விசாரணையின் போது, டாங்லின் போலீஸ் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், அந்த நபரின் வங்கி கணக்கையும், அவர் குற்றம் நடந்ததாக கூறப்படும் இடத்தின் CCTV காட்சிகளையும் ஆய்வு செய்தனர்”
“அதன் பிறகு அந்த நபர் கூறுவது பொய் என்பது உறுதியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு அடுத்தகட்ட விசாரணை நடந்து வருகின்றது” என்று போலீசார் தெரிவித்தனர். பொது ஊழியரிடம் இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளை அளிப்பவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.