TamilSaaga

சிங்கப்பூரில் மனிதவள நெருக்கடி அதிகரிக்கும்.. வெளிநாட்டு மனிதவளத்தைத் தொடர்ந்து அணுகுவதே ஒரே தீர்வு – SNEF தலைவர் ராபர்ட்

உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டிற்கு இடையேயான போர் சிங்கப்பூரை பொருளியல் ரீதியாக பாதித்திருந்தாலும் அவை தற்காலிகமானவை என்று சிங்கப்பூரின் தேசிய முதலாளிகள் Association (SNEF) தலைவர் Robert yap கடந்த ஏப்ரல் 28ம் தேதி வெளியிட்ட தனது மே தினச் செய்தியில் கூறினார்.

ஆனால் சிங்கப்பூரை பொறுத்தவரை மனிதவளம் தான் நீண்ட கால வளர்ச்சிக்கு சவால்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். மனிதவள நெருக்கடியைச் சமாளிக்க, முதலாளிகள் வேலைகளை மறுவடிவமைப்பு செய்ய தொழில்நுட்பத்தை அதிகப்படுத்த வேண்டும்.

தொழிலாளர்கள் பொருத்தமான திறன்களைப் பெற உதவ வேண்டும், மேலும் சிங்கப்பூருக்கு போட்டித்தன்மையுடன் இருக்க வெளிநாட்டு மனிதவளத்தைத் தொடர்ந்து அணுக வேண்டும் என்று அவர் கூறினார்.

நாட்டின் வளர்ச்சியைத் தக்கவைக்கவும், மனிதவள சவால்களைச் சமாளிக்கவும் முதலாளிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என்றும் திரு. ராபர்ட் யாப் கூறினார். தொழில் வழங்குபவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலைகளை மறுவடிவமைக்க வேண்டும், இதனால் அதிக உற்பத்தி கிடைக்கும், என்றார் அவர்.

சிங்கப்பூர் வரும் வெளிநாட்டு ஊழியர்கள்.. உங்கள் Work Pass Status என்ன? – யாருடைய உதவியும் இல்லாமல் MOM மூலம் நீங்கள் கண்டறிய ஒரு எளிய வழி!

உற்பத்தித்திறன் தீர்வுகள் மானியத்தைப் பயன்படுத்த நிறுவனங்களை அவர் ஊக்குவித்தார், இது டிஜிட்டல் தீர்வுகளைப் பின்பற்ற விரும்பும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான செலவில் 80 சதவீதம் வரை குறைக்கிறது என்று அவர் கூறினார்.

“நமது பொருளாதாரத்தை உலகிலேயே மிகவும் போட்டித்தன்மை கொண்டதாக வைத்திருக்க, திறன் பற்றாக்குறை மற்றும் பிற குறைகளை நிவர்த்தி செய்ய முதலாளிகள் வெளிநாட்டு மனிதவளத்தை அணுக வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

ஜோகூர்.. மலேசியர்களுக்கான மானிய எரிபொருளை பயன்படுத்தும் சிங்கப்பூர் வாகனங்கள்? தொடரும் சர்ச்சை.. இனி விதியை மீறினால் கடும் நடவடிக்கை

அப்படி செய்யும் பட்சத்தில் “அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைக்க சிங்கப்பூர் அதன் போட்டித்தன்மையையும் பணியிட நல்லிணக்கத்தையும் பராமரிக்க இது உதவும்” என்று அவர் மேலும் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts