TamilSaaga

Exclusive : சிங்கப்பூர் அரசின் சிறப்பு அனுமதி – “சிங்கத் தமிழனாக” சிங்கப்பூர் பறந்த பயணி

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்வதற்கும் இந்தியாவில் உள்ள ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதற்கும் தற்போது தற்காலிக தடை விதித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடந்த மே மாதம் 31ம் தேதி திருச்சி விமான நிலையத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த, சிங்கப்பூரில் வேலை செய்யும் ஒரு S Pass கொண்ட பயணி சிங்கப்பூர் அரசால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அதன் மூலம் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார்.

கடந்த மே மாதம் 31 தேதி சிங்கப்பூர் அரசால் அங்கீகரிக்கப்பட்டு சிங்கப்பூர் செல்வதற்காக திருச்சி விமான நிலையம் சென்றுள்ளார் ஒரு பயணி. ஆனால் அவர் விமான நிலையம் சென்ற நிலையில் இந்தியாவில் உள்ள ஊழியர்கள் சிங்கப்பூர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

உடனடியாக இந்த தகவலை அந்த பயணி சிங்கப்பூரில் தான் வேலை செய்து வரும் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். இதனையடுத்து அந்த நிறுவனமும் சிங்கப்பூர் அரசு சேர்ந்து அந்த ஊழியர் சிங்கப்பூர் திரும்புவதற்கு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சிங்கப்பூர் அரசிடம் இருந்து சிறப்பு கடிதங்கள் பெற்று அந்த பயணி சிங்கப்பூருக்கு தனது பயணத்தை தொடர்ந்துள்ளார். அந்த சிங்கப்பூர் நிறுவனம், இந்த ஊழியர் எங்களுக்கு மிகவும் முக்கியமான நபர் என்று சிங்கப்பூர் அரசிடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

பயணம் தடைப்பட்ட நிலையில் நேரடியாக சிங்கப்பூர் அரசிடம் இருந்தே அனுமதி வாங்கி சிங்கத் தமிழனாக சிங்கப்பூர் பறந்துள்ளார் அந்த பயணி.

Related posts