இந்து விஞ்ஞானம் வேறு ஒரு பரிமாணத்திற்கு சென்று வருகின்றது என்று தான் கூறவேண்டும், அப்படி விஞ்ஞானம் வளர வளர “Aliens” பற்றிய தாக்கமும் மக்களிடையே பல நூற்றாண்டுகளாக அதிகரித்து வருகின்றது என்று தான் கூறவேண்டும்.
இதுவறை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவுமே இல்லை என்றபோது, இணையத்தில் தாங்கள் Alienகளை பார்த்ததாக கூறும் மக்களின் கோடிக்கணக்கான வீடியோக்களை நம்மால் தினமும் பார்க்கமுடியும். இந்நிலையில் Daily Star என்ற செய்தி நிறுவனம் ஒன்று ஒரு விசித்திரமான பெண்ணை குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது.
51 வயதான Sacha Christie என்ற UKவை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு பலமுறை ஏலியன்கள் கண்முன் தோன்றியதாக கூறுகின்றார். அதுமட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக வேட்டை விட்டு வெளியில் செல்லவே தான் பயப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காரணம், தான் அப்படி வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஏலியன்கள் தன்னை அவர்களது கிரகத்திற்கு எடுத்து செல்லக்கூடும் என்று அவர் நினைக்கிறார். கிறிஸ்டி இதுவரை 9 முறை UFO போன்ற வேற்றுக்கிரக செயல்பாடுகளை கண்டுள்ளாராம்.
அவருக்கு 7 வயதாக இருந்தபோது முதல் முறையாக ஒரு UFOஐ கண்டதாக கூறுகின்றார், Unknown Flying Object என்பதே அதன் பொருள். 1997ம் ஆண்டு தனது குடும்பத்துடன் ஒருமுறை சுற்றுலா சென்றபோது வானத்தில் ஒரு கைவினைப்பொருளைக் கண்டதாகவும்.
வெறுங்காலுடன் வேற்றுகிரகவாசி ஒருவர் தன்னைக் கடந்து செல்வதைக் கண்டதாகவும் அவர் கூறினார். வானத்தில் பெரிய வெளிச்சம் ஒன்று வருவதை அவரது முன்னாள் துணைவர் ஸ்டீவ் கவனித்ததாகவும் அவர் பகிர்ந்து கொண்டார்.
எல்லோரும் வானத்தை நோக்கி பார்த்தபோது, அவரது மகன் லூயி தனது காலில் ஏதோ ஒன்று தொடுவதை உணர்ந்ததாக தாயிடம் கூறியுள்ளார். நடந்த சம்பவங்களால் திகைத்துப் போன கிறிஸ்டி ஒரு நிமிடம் அங்கேயே அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
அதன் பிறகு வீட்டிற்குள் ஓடிய அவர் அதன் பிறகு வெளியில் வருவதையே முற்றிலும் தவிர்த்து வருகிறாராம். இதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கின்றது என்பது தெரியவில்லை என்றாலும். இருக்கின்றதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படாத ஒரு ஏலியனுக்கு பயந்து ஒரு பெண் வீட்டிலேயே முடங்கிக்கிடப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.