TamilSaaga

இரண்டு மாத சம்பளம் மட்டுமே ஏஜென்ட் கட்டணம்… சிங்கையில் வேலைக்கு வர இந்த பாஸ் போதும்… சில நாட்களே அப்ரூவல்… இத படிங்க!

சிங்கையில் வேலைக்கு வர ஏகப்பட்ட பாஸ்கள் நிலுவையில் இருக்கிறது. படித்தவர்களுக்கு ஒரு விதத்திலும், படிக்காதவர்களுக்கு ஒரு விதத்திலும் பாஸ் நடைமுறைகள் இருக்கிறது. ஏகப்பட்ட நாட்டினை சேர்ந்த மக்கள் தினமும் சிங்கை விமான நிலையம் வந்து இறங்குகின்றனர். அவர்களுக்கு ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு கொண்டு தான் இருக்கிறது.

இந்த வேலைகள் எல்லாம் பெரும்பாலும் ஆண்களுக்காகவே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் வேலை வாய்ப்பு என்னவோ குறைவு தான். அதில் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் இருந்தாலும் படிக்காதவர்களுக்கு வீட்டு வேலை மட்டுமே ஒரே வாய்ப்பாக இருக்கிறது. இதில் வேலை தேடுவதும் பெரிய போராட்டமாக இருக்கிறது.

இதையும் படிங்க: ஆசையாய் மகனின் திருமணத்துக்கு ஏற்பாடு செய்த தந்தை… திடீரென உயிரிழந்த சோகம்… அவரின் கடைசி ஆசையை செய்து காட்டிய மகன்… சடலத்தின் முன் தாலி கட்டிய வைரல் நிகழ்வு!

வீட்டு வேலை செய்ய நினைக்கும் பெண்கள் தங்கள் ஏரியாவில் இருக்கும் ஒரு நல்ல ஏஜென்ட்டிடம் பாஸ்போர்ட்டினை கொடுத்து வேலை தேட சொல்லுங்கள். தமிழ் குடும்பமாக இருந்தால் உங்கள் முதல் முறை சிங்கப்பூரில் இன்னும் நிம்மதியாக இருக்க முடியும் என்பதை கூட கூறலாம்.

23 வயது முதல் 50 வரைக்குள் இருக்கும் பெண்களை வீட்டு வேலைக்காக சேர்த்து கொள்ளலாம். ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு 50 வயதினை தாண்டினால் 60 வயது வரையில் புதுப்பித்து கொள்ள முடியும். 8ஆவது வரையாவது படித்திருக்க வேண்டியது அவசியமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலை தேடிக்கொண்டு இருக்கீங்களா… EPassல் உயர்த்தப்பட்ட சம்பளம்… என்னென்ன தகுதிகள் கேட்கப்படும்

கூடுதலாக,

  • முதலாளிகளின் NRIC-பதிவு செய்யப்பட்ட முகவரிகளில் வேலை செய்யுங்கள்.
  • முதல்முறை உதவியாளர்களாக இருந்தால், செட்டில்-இன் திட்டத்தில் (SIP) கலந்துகொள்ளவும்.
  • விசா ஒப்புதல் (IPA) கடிதத்தில் SIPல் அவர்களின் உதவியாளர்கள் கலந்து கொள்ள வேண்டுமானால், MOM தரப்பில் இருந்து முதலாளிகளுக்கு அறிவிக்கப்படும்.
  • IPA வரும் போது அவர்கள் சிங்கப்பூருக்குள் இருக்க கூடாது.
  • விசா மற்றும் $5000 சிங்கப்பூர் டாலர் செக்குரிட்டி பாண்ட் வந்தப்பின்னரே சிங்கைக்குள் அவர்களை முதலாளிகள் அழைத்து வர வேண்டும்.

ஏஜென்ட் உங்களிடம் ரெண்டு மாத சம்பளத்தினை கட்டணமாக கேட்பார்கள். மேலும் உங்களுக்கு வேறு எந்த செலவுகளும் இருக்காது. பெர்மிட் அப்ளே செய்து விமான டிக்கெட் போட்டு உங்களை சிங்கப்பூருக்குள் முதலாளியே அழைத்து வந்து விடுவார். வேலையில் கண்டிப்பாக ஒரு நாள் விடுப்பு கொடுக்க வேண்டும் என சமீபத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

வேலையில் எதுவும் பிரச்னை இருந்தால் ஒரு MOM அதிகாரியுடன் பேச MDW ஹெல்ப்லைன் 1800 339 5505ல் அழைக்கவும். இந்த ஹெல்ப்லைன் கண்டிப்பாக மன உளைச்சலில் உள்ள MDW களுக்கானது. மற்ற விஷயங்களுக்கு, MOM தொடர்பு மையத்தை அழைக்கவும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts