TamilSaaga

சிங்கப்பூர் பொது சுகாதாரப் பணியாளர்களுக்கு பண விருது – அமைச்சர் ஓங் யே குங் அறிவிப்பு

சிங்கப்பூர் பொது சுகாதாரப் பணியாளர்கள் COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் S$4,000 வரையிலான பண விருதைப் பெறுவார்கள் என்று சுகாதார அமைச்சர் ஓங் யே குங் நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 5) அறிவித்தார்.

முதியோர் இல்லங்கள் மற்றும் டயாலிசிஸ் மையங்கள் போன்ற முன்னணி சேவைகளை வழங்கும் சமூக பராமரிப்பு நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் இந்த விருது நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார்.

இத்தகைய வசதிகள் “அவர்களின் திறனை விரிவுபடுத்தி, நர்சிங் பராமரிப்பு தேவைப்படும் பாதிக்கப்படக்கூடிய முதியவர்களை மருத்துவமனைகளுக்கு வெளியே வைத்திருக்கவும், மருத்துவமனை படுக்கைகளை விடுவிக்கவும் அயராது உழைத்துள்ளன” என்று சுகாதார அமைச்சகம் (MOH) ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

“இந்த நிறுவனங்கள் பொது சுகாதார நிறுவனங்களுடன் இணைந்து COVID-19 க்கு எதிரான எங்கள் போராட்டத்தில் ஒருங்கிணைந்தவை” என்று மேலும் கூறியுள்ளது.

தகுதியான சுகாதார நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 100,000 ஊழியர்கள் இந்த விருதைப் பெறுவார்கள்.

“இந்தப் போராட்டன் முழுவதிலும் சுகாதாரப் பணியாளர்களின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமாக இது செயல்படுகிறது” என்று MOH கூறியுள்ளது.

COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில், ஒவ்வொரு பொது சுகாதாரத் தயார்நிலை கிளினிக்கிற்கும் S$10,000 மானியமாக வழங்குவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts