TamilSaaga

நாங்களே கஷ்டத்துல இருக்கோம்; இதுல வெளிநாட்டு ஊழியர்களுக்கு எப்படி அதிக Basic Pay கொடுக்க முடியும்? – சிங்கப்பூரில் முதலாளிகள் “ஆவேசம்”

சிங்கப்பூரில் வரும் செப்டம்பரில் இருந்து, எம்ப்ளாய்மென்ட் பாஸ் மற்றும் எஸ் பாஸ் மூலம் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் அதிக அளவில் குறைந்தபட்ச சம்பளம் கொடுக்க வேண்டும் என்று சிங்கப்பூர் மனிதவள அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால் அமைச்சகத்தின் இந்த முடிவு இங்குள்ள முதலாளிகளை அதிக உள்ளூர் மக்களை வேலைக்கு அமர்த்துவதற்கு தூண்டுமா? அல்லது அது அவர்களின் வணிகத் திட்டங்களை பாதிக்குமா? என்ற மிகப்பெரிய கேள்வி ஒன்று தற்போது எழுந்துள்ளது.

“ரூல்ஸ்-ன்னா ரூல்ஸ் தான்.. வண்டியை எடு”.. சிங்கப்பூரில் வயதானவர்களிடம் மனசாட்சியின்றி நடந்து கொண்ட Security – வைரலான வீடியோவால் “ஆப்பு”

இந்த விஷயத்தில் தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் சில்லறை விற்பனை, F&B, தகவல் தொடர்பு மற்றும் நிதித் துறைகளில் ஏற்படும் தாக்கத்தை ஆராய்ந்து வருகின்றது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்பும் முதலாளிகள்,மீண்டும் அவர்களுக்கு அதிக குறைந்தபட்ச சம்பளத்தை வழங்குவதில் சிரமப்படுவார்கள். ஏனெனில் சிங்கப்பூர் புதிய வேலைவாய்ப்பு பாஸ் (EP) மற்றும் S பாஸ் விண்ணப்பதாரர்களுக்கான சம்பள வரம்புகளை மூன்று ஆண்டுகளுக்குள் மூன்றாவது முறையாக அமைச்சகம் உயர்த்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய மாற்றங்களின்படி மேற்குறிப்பிட்ட பாஸ்களில் உள்ளவர்கள் அடிப்படை சம்பளத்தில் இருந்து 500 டாலர் அதிகரிப்பை பெறுவார்கள். இந்த தகவல் கடந்த பிப்ரவரி 18ம் தேதி பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவித்தார்.

அதே போல பழைய EP மற்றும் S Pass விண்ணப்பதாரர்களுக்கு, அவர்களின் அதிக சம்பள கட்-ஆஃப்கள் இணைந்தே உயர்த்தப்படும். Renewalகளுக்கு, இந்த மாற்றங்கள் ஒரு வருடம் கழித்து, அதாவது வரும் செப்டம்பர் 2023 முதல் பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சில்லறை விற்பனையாளர்கள் மூலப் பொருட்கள், கப்பல் போக்குவரத்து, எரிபொருள் மற்றும் வாடகை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்து வருவதால் ஏற்கனவே கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளார்கள். அவர்களின் தற்போதைய கவலைகளை இன்னும் அதிகமாக்குவது, செப்டம்பரில் அமலுக்கு வரும் எம்ப்ளாய்மென்ட் பாஸ் (EP) மற்றும் எஸ் பாஸ் வைத்திருப்பவர்களுக்கான சம்பள வரம்புகள் அதிகரிப்பு தான்.

சிங்கப்பூரை பொறுத்தவரை கடந்த ஆண்டு செப்டம்பரில் சுமார் 1,52,600 பேரை பணியமர்த்திய சில்லறை வர்த்தகத்திலும் இந்த ஊதிய உயர்வு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் சிங்கப்பூர் சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SRA) இத்துறையில் பணிபுரியும் வெளிநாட்டினரின் சரியான புள்ளிவிவரங்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், தொழிலில் உள்ள உள்ளூர் தொழிலாளர்களுக்கு வெளிநாட்டு ஊழியர்களின் விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக SRA தெரிவித்துள்ளது.

உணவு மற்றும் பானங்கள் (F&B) துறையில் உள்ள வியாபாரிகளும் அதிகரித்து வரும் தொழிலாளர் செலவுகள், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் அவர்களின் விரிவாக்கத் திட்டங்கள் குறித்து கவலை கொண்டுள்ளனர்.

“(F&B) துறையில் ஊதிய செலவுகள் கடுமையாக உயரும், இது உணவகங்கள் தங்கள் செயல்பாடுகளை குறைக்க வழிவகுக்கும். மனிதவள பிரச்னையை சரியச்செய்ய சில உணவகங்கள் வாரத்தில் ஒரு நாள் மூடப்படும் என்றும், இறுதியில் இதன் விளைவாக சில விஷயங்கள் நடக்கலாம் என்று உணவு மற்றும் பான மேலாண்மை சங்கத்தின் தலைவர் குங் தியோங் வா கூறினார்.

“மற்றவர்களுடன் ஏன் படுத்து தூங்குற?” – சிங்கப்பூரில் சக ஊழியரின் விரலை கடித்துத் துப்பிய இந்தியர் – “கண்றாவி” பிரச்சனைக்கு 10 மாத சிறை

நிதித்துறையில் வெளிநாட்டினரின் குறைந்தபட்ச சம்பளத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கையானது, பணியிடங்களை நிரப்புவதற்கு அதிகமான உள்ளூர் மக்களைப் பயிற்றுவிக்க முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுக்கும். ஆகா இந்த குறைந்தபட்ச சம்பளத்தில் ஏற்படும் உயர்வு ஒரு இக்கட்டான சூழலை தான் சிங்கப்பூரில் ஏற்படுத்தியுள்ளது என்பது ஒப்புக்கொள்ளும் விஷயமாக உள்ளது. இதனால் உள்ளூர் பணியாளர்களின் வேலை வாய்ப்பு உயருமா? அல்லது இங்குள்ள முதலாளிகள் வேறு முடிவு எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts