TamilSaaga

“ரூல்ஸ்-ன்னா ரூல்ஸ் தான்.. வண்டியை எடு”.. சிங்கப்பூரில் வயதானவர்களிடம் மனசாட்சியின்றி நடந்து கொண்ட Security – வைரலான வீடியோவால் “ஆப்பு”

சிங்கப்பூரில் ஒரு மழை நாளில் டான் டோக் செங் மருத்துவமனையின் நுழைவாயிலில் வயதான தம்பதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் ஒரு பாதுகாப்பு அதிகாரி முரட்டுத்தனமாகவும் விரோத நோக்கிலும் நடந்து கொண்டது அருகில் இருந்த கேமராவில் சிக்கியுள்ளது. இந்த வீடியோ முதலில் டிக்டோக்கில் வெளியிடப்பட்டது, பின்னர் மற்ற சமூக ஊடக தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. அந்த இரண்டு நிமிட வீடியோவில், ஒரு முதியவரை அவரது மகன் சிறிய லாரியில் இருந்து வெளியே கொண்டு செல்வதைக் காணமுடிந்தது. மற்றொரு நபர் சக்கர நாற்காலியை மேல் நோக்கி தள்ளுகிறார்.

பாஸ்போர்ட் இல்லை, VTL Apply செய்யவில்லை : செலவில்லாமல் சிங்கப்பூர் to ஜோகூர் பயணம் – இது பலே வேலை தான்!

முதியவர் சக்கர நாற்காலியில் அமருவதற்கு முன் சிறிது நேரம் எடுத்துக் கொண்ட நிலையில், அந்த குடும்பத்தை விரைந்து நகரும்படி பாதுகாப்புக் காவலர் இரண்டு முறை கைதட்டி அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் வாகனத்தை இன்னும் கொஞ்சம் தள்ளிச்சென்று நிறுத்தினால் என்ன என்று கேட்டபோது, அந்த முதியவரை சக்கர நாற்காலியில் ஏறிச் செல்வதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை என்று முதியவரின் மகனும் வயதான பெண்ணும் சைகை செய்துள்ளனர்.

பின்னர் அந்த பாதுகாவலர் முதியவரின் மகனிடம், உங்களுடைய சிறிய லாரி சாலையைத் தடுப்பதாகவும், அதிக வாகனங்கள் மருத்துவமனைக்குள் நுழைவதால் நெரிசல் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளார். இறுதியில் வண்டியை எடுப்பதற்காக லாரியை நோக்கி திரும்பிச் சென்ற மகனிடம் “Rules என்றால் Rules தான், நீங்கள் முன்னே செல்லுங்கள், இங்கே நிறுத்த வேண்டாம்!” என்று கூறியுள்ளார். இதனால் எரிச்சலடைந்த அந்த வயதான பெண்மணி காவலாளியிடம் குரல் உயர்த்தி “எங்களை மன்னித்துவிடுங்கள்” என்று கூறியுள்ளார். இந்த வயதானவர்களால் அதிக தூரம் நடக்க முடியாததால் வேறு வழியின்றி இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

“கொஞ்சம் சிரமம் தான்” : சிங்கப்பூரில் மார்ச் முதல் அனைத்து டாக்ஸி ஆபரேட்டர்களும் கட்டணத்தை உயர்த்த திட்டம்!

இந்த நிகழ்வுகளை படமெடுத்த அந்த நபர் இணையத்தில் பதிவேற்றும்போது ஏன் அந்த காவல் அதிகாரி சற்றும் இரக்கம் காட்டாமல் செயல்படுகிறரர் என்று கூறி அக்காணொளியை பதிவிட்டுள்ளார். இணைய வாசிகள் பலரும் உடல் நிலை முடியாத முதியவர்களிடம் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று கேள்விகளை கேட்டுள்ளனர். இணையத்தில் இது விதைத்தபொருளாக மாறிய நிலையில் பாதுகாப்பு மேலாண்மை நிறுவனமான AETOS உடன் மருத்துவமனை இந்த விஷயத்தை விசாரிக்கும் போது, அந்த ​​அதிகாரி தனது பணிகளில் இருந்து நீக்கப்பட்டதாக TTSH கூறியுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts