TamilSaaga

‘கோவிஷீல்டு செலுத்திக்கொண்ட இந்தியர்கள்’ – பிரான்ஸ் வர அனுமதி அளித்த பிரதமர் ஜீன் கேஸ்டெஸ்

தற்போது அண்டை நாடான இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு கொரோனா தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனகா என்ற நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை தான் இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வருகிறது.

உலக சுகாதார மையம் அங்கீகாரத்தை பெற்றுள்ள இந்த தடுப்பூசி பல்வேறு நாடுகளில் தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சூழலில் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுபவர்கள் செலுத்தி இருக்க வேண்டிய தடுப்பூசியின் பட்டியலில் இந்த நிறுவனம் வெளியிட்ட கோவிஷீல்டு தடுப்பூசியின் பெயர் இடம் பெறவில்லை.

ஆகையால் இந்தியாவில் இவ்வகை தடுப்பூசி செலுத்திகொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய அரசின் சார்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு செலுத்திக்கொண்டவர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு உரிய பாதுகாப்புடன் வரலாம் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts