TamilSaaga

அண்ணா பேச்சை மெய்மறந்து.. ரசித்துக் கேட்ட சிங்கப்பூரின் தந்தை ‘Lee Kuan Yew’ – ஒரு கூட்டத்தையே கட்டுக்குள் வைத்திருந்த தமிழனின் ஆளுமையை பார்த்து சிலிர்த்துப் போன நாள்!

சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் Lee Kuan Yew தமிழர்களின் நெருங்கிய நண்பராகவும், அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்கிற உண்மையான அக்கறையின்பாலும் செயல்பட்டவர் என்றால் மிகையல்ல. இதற்கு நம்மால் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். முக்கியமான ஒரு உதாரணம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான அறிஞர் அண்ணா. அவர் தமிழக முதலமைச்சராவதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, சிங்கப்பூர், மலேசியாவில் அண்ணா கலந்துகொண்ட கூட்டங்களில் சிங்கப்பூரின் தந்தை லீ குவான் நேரடியாகக் கலந்துகொண்டு, அண்ணாவின் பேச்சை ரசித்துக் கேட்டார்.

பெரியண்ணன் அண்ணா

அறிஞர் அண்ணா, தமிழக முதலமைச்சராவதற்கு முன்னர் இந்திய நாடாளுமன்ற எம்.பியா இருந்தார். அப்படியான சூழலில் 1965-ம் ஆண்டு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அண்ணா உள்ளிட்ட இந்தியக் குழுவினரை வரவேற்க இப்போதைய மலேசியாவில் உள்ள JOHORE BAHRU-வில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிங்கப்பூர், மலேசிய வாழ் தமிழ் மக்கள் பெருமளவில் கூடியிருந்தனர். திறமையாளர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு மரியாதை செலுத்துவதில் எந்தவிதத் தயக்கமும் கொள்ளாதவர் சிங்கப்பூரின் தந்தையாகக் கொண்டாடப்படும் Lee Kuan Yew.

அண்ணாவைப் பற்றியும் தமிழகத்தில் அவர் மேற்கொண்ட பணிகள் பற்றியும் முன்னரே தெரிந்து வைத்திருந்த பிரதமர் Lee Kuan Yew, JOHORE BAHRU-வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்துக்கு நேரடியாக வந்து அண்ணாவுக்கு மரியாதை செய்தார். இருவரும் நீண்டநாட்கள் பழகியவர்களைப் போலவே நடந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் அண்ணா பேசிய பேச்சை மிகவும் ரசித்துக் கேட்டார். `தமிழ் மொழி என்பது பொன்னுக்குச் சமமானது. பொன் உருவாக ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும்’ என்று தொடங்கி தமிழ் மொழியின் பெருமையையும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பெருமையையும் அறிஞர் அண்ணா, தனது பேச்சிலே எடுத்துரைத்தார். அண்ணாவின் பேச்சை ரசித்துக் கேட்ட சிங்கப்பூர் பிரதமர் Lee Kuan Yew, அண்ணாவைத் தனது மூத்த சகோதரர் என்றே தனது பேச்சில் குறிப்பிட்டார். அதேபோல், தனது அலுவலகத்துக்கும் அண்ணாவை அழைத்து கௌரவப்படுத்தினார்.

மேலும் படிக்க – எல்லை மீறிய பார்ட்டி… சிங்கப்பூரில் 19 வயது சிறுவனை… தனது சிறுநீரை குடிக்க வைத்து டார்ச்சர் செய்த 20 வயது இளம்பெண்!

Lee Kuan Yew – அண்ணா ஒற்றுமை!

சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பல வகைகளிலும் தொலைநோக்குத் திட்டங்களை வகுத்து நவீன சிங்கப்பூரின் தந்தையாகவும் சிற்பியாகவும் போற்றப்படும் Lee Kuan Yew எடுத்த கொள்கை முடிவுகளில் முக்கியமானது இருமொழிக் கொள்கை. சிங்கப்பூர் மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியைக் கற்றுக்கொள்வதோடு, ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். உலக அளவில் தொடர்பு மொழியாக ஆங்கிலம் உருவெடுக்கும். அதற்கு தனது மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றெண்ணினார். அதேபோல், சிங்கப்பூர் குடிமகன் ஒவ்வொருவரும் தனது தாய்மொழியைக் கற்றுக்கொண்டால் மட்டுமே, எதிர்காலம் அவர்களுக்கு சிறப்பானதாக இருக்கும் என்றும் அவர் நம்பினார். மொழிக் கொள்கைகள் பற்றிய பேச்சு எப்போது எழுந்தாலும் Lee Kuan Yew எடுத்த இந்த முடிவை உலக நாடுகள் இன்றைக்கும் பாராட்டாமல் இருக்காது. அந்த அளவுக்கு Globalisation எனப்படும் உலகமயமாக்கலை முன்னரே கணித்து ஒரு தீர்க்கதரிசியாக இந்த முடிவை அவர் எடுத்திருந்தார். சிங்கப்பூரில் 70%-த்துக்கும் மேற்பட்டவர்கள் சீனர்களே. அவர் நினைத்திருந்தால், சீன மொழியை மட்டும் அலுவல் மொழியாக அங்கீகரித்து அதன் மூலம் அரசியல்ரீதியாக பலனடைந்திருக்க முடியும். ஆனால், அவர் சிங்கப்பூரின் வளர்ச்சியை உயிரெனக் கருதினார் என்பதற்கு இதைவிட பெரிய உதாரணம் என்ன சொல்லிவிட முடியும்?

அதேபோல்தான், இந்திய அரசு இந்திய தேசிய மொழியாக அறிவிக்க எத்தனித்தபோது அதற்குக் கடுமையான எதிர்ப்பை அறிஞர் அண்ணா பதிவு செய்தார். இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் எல்லா மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்று அவர் வலுவாகக் குரல் கொடுத்தார். இதுவே, இந்தியாவின் முன்னேறிய மாநிலங்களில் தமிழ்நாடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கக் காரணம் என்றால் மிகையாகாது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” தளத்தை பின்தொடருங்கள்

Related posts