TamilSaaga

சிங்கப்பூரில் சக ஊழியரின் விரலை கடித்துத் துப்பிய தமிழக தொழிலாளி – “கண்றாவி” பிரச்சனைக்கு சிறை தண்டனை

சிங்கப்பூர்: குடிபோதையில் சக ஊழியரின் விரலை கடித்து துப்பிய 31 வயதான இந்திய தொழிலாளருக்கு 10 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் பணிபுரிந்து வருபவர் தான் லோகன் கோவிந்தராஜ் இவருக்கு வயது 31. இவரது சக ஊழியர் முத்து செல்வம், வயது 42. இருவரும் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மாலை 4.30 மணியளவில், சிங்கப்பூரின் மேற்குக் கடற்கரையில் உள்ள கிராஞ்சி கிரசென்ட்டில் உள்ள ஒரு தொழிற்பேட்டையில் உள்ள தங்குமிடத்திற்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு லாரியில் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர் என்று கூறப்படுகிறது.

அப்போது போதை தலைக்கேற, கோவிந்தராஜ் செல்வத்தை திட்டியதுடன், Dormitory-ல் மற்ற தொழிலாளர்களுடன் அவர் தூங்குவதாக குற்றம் சாட்டினார். அதற்கு செல்வம், ‘பொய் சொல்வதை நிறுத்திட்டு இங்கிருந்து கிளம்பு’ என்று சொல்லி அவரை வெளியேறச் சொன்னார். இருவரும் லாரியில் இருந்து இறங்கிய பிறகு, கோவிந்தராஜ் தொடர்ந்து சத்தம் போட்டு, அங்கிருந்து கிளம்பிய செல்வத்தை தடுத்ததால், செல்வம் தனது இடது கையால் கோவிந்தராஜை தள்ளிவிட்டார்.

மேலும் படிக்க – Work Permit Holders-ன் பாரத்தை குறைத்த சிங்கப்பூர் அரசு.. SHN கட்டணம் குறைப்பு – அதிலும் காசு பார்த்த சில முதலாளிகளுக்கு “நெத்தியடி”

அப்போது செல்வத்தின் இடது கையை வலிமையாக பிடித்த கோவிந்தராஜ், சுண்டு விரலை தன் பற்களின் முழு பலம் கொண்டு கடித்து துப்பினார். ரத்த வெள்ளத்தில் துடித்த செல்வம், கோவிந்தராஜின் தலையில் அறைந்தும், சட்டையைப் பிடித்தும் தள்ளினார்.

பிறகு அவர் Khoo Teck Puat மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், குற்றம் இழைத்த கோவிந்தராஜுக்கு தற்போது 10 மாத காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – “கொஞ்சம் சிரமம் தான்” : சிங்கப்பூரில் மார்ச் முதல் அனைத்து டாக்ஸி ஆபரேட்டர்களும் கட்டணத்தை உயர்த்த திட்டம்!

துண்டிக்கப்பட்ட அந்த விரல் குற்றம் நடந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இருப்பினும், செல்வத்திற்கு சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர், அவரது கை விரலை மீண்டும் இணைக்க முடியவில்லை என்று கூறியதாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts