TamilSaaga

சிங்கப்பூருக்கு skilled டெஸ்ட் முடிச்சிட்டு வேலைக்கு போறீங்களா? ப்ரொமோஷனுடன் அதிக சம்பளம் வேணுமா? coretrade முடிச்சால் போதும்.. லைஃப் பாதுகாப்பா இருக்கும்!

சிங்கப்பூரில் வேலை செய்து வரும் ஊழியர்கள் coretrade செய்து விட்டால் கண்டிப்பாக ப்ரோமோஷன் மற்றும் சம்பள உயர்வு கூட கிடைக்கும். இதை தெளிவாக தெரிந்து கொள்ள விரும்பினால் இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சிங்கப்பூரில் வேலைக்காக வந்துள்ள ஊழியர்கள் coretrade எப்போது அடிக்கலாம் என்றால் வேலை செய்ய தொடங்கி 4 வருடங்கள் முடிந்த பிறகு அடிக்கலாம். அல்லது நீங்கள் தமிழ்நாட்டில் அடித்த Skilled testன் காலாவதி முடியும் முன்னர் சிங்கப்பூரிலேயே வேலை செய்ய வேண்டும் என்றாலும் coretrade முடிக்கலாம். இதை முடித்தவர்களுக்கு கம்பெனி கட்டும் levy குறையும் என்பதால் உங்களின் சம்பளம் அதிகரிக்கும்.

இதையும் படிங்க: சிங்கப்பூருக்கு TWP பாஸில் கிளம்ப இருக்கீங்களா… வொர்க் பெர்மிட்டிக்கு மாற முடியுமானு குழப்பமா இருக்கா? இதோ இருக்கு உங்க கேள்விக்கான மொத்த விடை!

BCAவால் coretradeஐ அறிமுகப்படுத்தியதன் நோக்கமே கம்பெனி நிர்வாகத்தினருக்கு levy குறையும். ஊழியர்களால் சிங்கப்பூரில் தொடர்ந்து சில வருடங்கள் இருக்க முடியும் என்பதற்கு தான். levy இருவகையில் கம்பெனி நிர்வாகத்தால் கட்டப்பட்டு வருகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாட்டு வெளிநாட்டு Higher skilled முடித்த ஊழியர்களுக்கு மாதம் $300 சிங்கப்பூர் டாலர் கட்டப்படும். இது ஒரு நாளைக்கு $9.87 சிங்கப்பூர் டாலராக இருக்கிறது. basic skill ஊழியர்களுக்கு levy தொகை $700 சிங்கப்பூர் டாலராக இருக்கும்.

CoreTradeல் Tradesmen முடிக்க 4 வருட சிங்கப்பூர் பணி அனுபவம் வேண்டும். இதற்கு எழுத்து தேர்வு இருக்காது. 6 வருட சிங்கப்பூர் பணி அனுபவம் இருந்தால் Foremen முடிக்க முடியும். 8 வருட சிங்கப்பூர் பணி அனுபவம் இருந்தால் coretradeல் Supervisor முடிக்க முடியும்.

வொர்க் பாஸின் காப்பி, Skill சான்றிதழ், WP ஆன்லைனில் இருந்த தகவல்களின் காப்பி மற்றும் குறிப்பிட்ட சில துறைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள லைசன்ஸ் ஆகியவை coretrade செய்ய விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பத்துடன் சமர்பிக்கப்படும். இந்த விண்ணப்பத்திற்கு $15 சிங்கப்பூர் டாலர் கட்டப்பட வேண்டும். முதல்முறையாக coretrade முடிக்கும் போது $1350 முதல் $1450 சிங்கப்பூர் டாலர் வரை செலவுகள் ஆகும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலைக்காக வந்திருக்கும் ஊழியரா நீங்க… குடும்பத்துடன் தங்க ஆசையா? Dependent விசா எடுக்கலாம்… மிஸ்ஸாகும் பட்சத்தில் இதை கூட Follow பண்ணுங்க

இதில், ஃபெயில் ஆகி மீண்டும் டெஸ்ட் கலந்து கொண்டால் $500 சிங்கப்பூர் டாலர் வரை செலவுகள் ஆகும். குறிப்பிட்ட துறைகளில் upgrade கோர்ஸ் செய்யும் போது $100 சிங்கப்பூர் டாலருக்குள் தான் செலவுகள் இருக்கும். இந்த படிப்புகளுக்கு குறைந்தது அரைநாளில் இருந்து அதிகமாக 5 நாட்கள் வரை உள்ளாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts