TamilSaaga

தமிழகம் ஈன்றெடுத்த 2வது “அப்துல் கலாம்” – ஒரேயொரு பேட்டியில் “ஓஹோ” புகழ்.. நேரில் அழைத்து புது “வீடு” கொடுத்த முதல்வர் – சொக்கத் தங்கம்!

அப்துல்கலாம்… இந்திய நாட்டின் அடையாளங்களில் ஒருவர். குறிப்பாக, இளைஞர்களின் ரியல் ஹீரோ. “கனவு காணுங்கள்” என்ற அற்புத வார்த்தையை இளம் சமுதாயத்தினர் மத்தியில் விதைத்த வித்தகர். தமிழகம் ஈன்றெடுத்த பல பொக்கிஷங்களில் கலாமும் ஒருவர்.

அப்படி தமிழகம் ஈன்றெடுத்த இன்னொரு அப்துல் கலாம் ஒருவர் தோன்றியிருக்கிறார். ஒரே நாளில் ஹீரோவாகி இருக்கிறார். ஒரே பேட்டியில், பல மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையை அடுத்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் அப்துல் கலாம், 7-ம் வகுப்பு படிக்கிறான்.

சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றில், “வாழ்வில் உங்களுக்கு பிடிக்காத நபர் என்றால் அது யார்” என்ற ஒவ்வொரு சிறுவர்களிடமும் கேட்க, எல்லாரும் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லிக் கொண்டே வந்தனர்.

மேலும் படிக்க – “மற்றவர்களுடன் ஏன் படுத்து தூங்குற?” – சிங்கப்பூரில் சக ஊழியரின் விரலை கடித்துத் துப்பிய இந்தியர் – “கண்றாவி” பிரச்சனைக்கு 10 மாத சிறை

ஆனால் சிறுவன் அப்துல் கலாம், “யாரையும் புடிக்காதுன்னு முதல்ல சொல்லாதிங்க, என்னையும் எல்லாரும் ‘பல்லன்’னு தான் கூப்டுவாங்க… நான் ஏன் எல்லாரையும் புடிக்காதுன்னு சொல்லனும்?.. எல்லாரும் நண்பர்கள் மாதிரி தான். ஒற்றுமை இல்லாத நாடு எதுக்கு இருக்கணும்? நம்ம நாடு ஒற்றுமையான நாடுனு சொல்றோம், ஒற்றுமை இல்லாம இருந்தா எப்படி?” என்று கேள்விக் கேட்ட அறிவுஜீவிகளை திணறடித்து விட்டான்.

இதற்கு பிறகு வேறு ஒரு பேட்டியில், ஹிஜாப் பிரச்சினையை குறித்து அப்துல் கலாமிடம் கேட்டனர். அதற்கு அவன், “சாதி மத கலவரம் நமக்கு எதுக்கு.. அதெல்லாம் இங்க தேவையில்லை. எல்லாருமே இந்தியர்கள், எல்லாரும் ஒரே மாதிரிதான். எல்லாருக்கும் ரத்தம் கலரு ஒன்னுதான். நமக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் சாதி மதம்ன்னு சொல்லி தந்துட்டாங்க. அதனாலதான் சாதி பற்றி இப்போ வரைக்கும் பேசிட்டு இருக்கோம் ” என்று பெரியவர்களே திக்குமுக்காடி போகும் அளவுக்கு பதில் கொடுத்தான்.

மேலும் படிக்க – Work Permit Holders-ன் பாரத்தை குறைத்த சிங்கப்பூர் அரசு.. SHN கட்டணம் குறைப்பு – அதிலும் காசு பார்த்த சில முதலாளிகளுக்கு “நெத்தியடி”

ஆனால், அப்துல்கலாமின் இந்த பேட்டிக்கு பிறகு, அவன் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர், வீட்டை காலி செய்ய வற்புறுத்த, கலாமின் பெற்றோர் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் இதுகுறித்து கோரிக்கை வைத்தனர். இதற்கு உடனடியாக செவி சாய்த்த முதல்வர், அவர்களது குடும்பத்திற்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க அமைச்சர் தாமோ.அன்பரசனுக்கு உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி, சிறுவன் அப்துல் கலாம் மற்றும் அவனது பெற்றோரையும் நேரில் அழைத்துப் பாராட்டினார்.

பிறகு அமைச்சர் தாமோ.அன்பரசன் தனது ட்விட்டர் பதிவில், “தமிழக முதல்வரின் உத்தரவின் பேரில் மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்து எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டேன்.

அவருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும். பின்னர் யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் என்று உரக்கச் சொன்ன மாணவர் ஏ.அப்துல்கலாமை பாராட்டி ‘பெரியார் இன்றும் என்றும்’ நூலினை பரிசாக வழங்கினேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts