உலகமெங்கும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் சூழலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் வேறு சில நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 48 பேர் இந்த உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமே 9 பேரிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிங்கப்பூரில் இதுவரை உருமாறிய டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டறியப்படவில்லை என்றும் அந்த வைரஸ் கவலையளிக்க கூடியதா என்று அறியக்கூடிய பரிணாம பரிசோதனை ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவ சேவைகளுக்கான இயக்குனர் திரு.கென்னத் மாக் தெரிவித்துள்ளார்.