TamilSaaga

மலேசியா – திருப்பி அனுப்பப்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள்

மலேசியாவில் கடந்த சில காலங்களாக உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டவரை கைது செய்து வருகின்றது மலேசிய குடிநுழைவுத்துறை. இந்நிலையில் மலேசியாவில் பாதிக்கப்படக்கூடியவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட 145 இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர்.

இந்த கொரோனா காலகட்டத்தில் சுகாதார நிலையை கருத்தில்கொண்டு, இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தோனேசியாவின் Tangerang-ல் உள்ள Soekarno-Hatta என்ற விமான நிலையத்தை அடைந்த தொழிலாளர்கள் ஜகார்த்தாவில் உள்ள Wisma Atlet என்ற கொரோனா அவசர மருத்துவமனைக்கு தனிமைப்படுத்தலுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தோனேசியாவின் Bengkulu, West Kalimantan, South Kalimantan, South Sulawesi, North Sulawesi, Jambi, Central Java, Southeast Sulawesi, West Sumatra, South Sumatra ஆகிய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் தாயகம் அனுப்பப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் 5 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பிறகு சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

Related posts