TamilSaaga

சிங்கப்பூரில் இருக்கும் தமிழர்களே உஷார்… டேட்டா எண்ட்ரி வேலைக்கு அழைத்து வந்து பெத்த தொகைக்கு தமிழக இளைஞரை விற்ற ஏஜென்ட்… பதற வைக்கும் சம்பவம்

வெளிநாட்டு வேலைக்காக போராடி வரும் இளைஞர்களுக்கு அதில் மிகுந்த எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டும். அது தவறும் பட்சத்தில் பெரிய பிரச்னையில் கூட மாட்டிக்கொள்வோம் என்பதற்கு சான்றாகி இருக்கிறார் இளைஞர் ஒருவர்.

தமிழ்நாட்டை சேர்ந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நீதிராஜன். டிப்ளமோ இன்ஜினியரிங் படித்தவருக்கு லட்சத்தில் சம்பாதிக்க ஆசையாக இருந்தது. அப்போது இவரிடம் அறிமுகமானவர் தான் ஏஜெண்ட் மகதீர் முகமது. கம்போடியாவில் டேட்டா எண்ட்ரி வேலைக்கு லட்சத்தில் சம்பளம் கிடைக்கும் என ஆசை காட்டி இருக்கிறார்.

அதை தொடர்ந்து, நீதிராஜனுக்கு அந்த வேலையில் சேர விருப்பம் எனக் கூறி இருக்கிறார். அங்கு செல்ல 2 லட்ச ரூபாய் கேட்டாராம் ஏஜெண்ட் மகதீர். இவரும் அங்கு இங்கு என கடனை வாங்கி 2 லட்ச ரூபாயை கொடுத்துவிட்டார்.

இதையும் படிங்க: 20 ஆயிரம் சம்பளம் என ஆசையாக சிங்கப்பூர் வந்த தமிழக பெண்ணை ஏமாற்றிய குடும்பம்… 18 மணிநேரம் வேலை வாங்கி பாதி சம்பளம் கொடுத்த அவலம்….

நீதிராஜனை கடந்த ஜூன் மாதம் சுற்றுலாவிசாவில் கம்போடியாவிற்கு அழைத்து சென்றுள்ளனர். வாங்கிய கடனை அடைத்துவிடலாம் லட்சத்தில் சம்பளம் என்ற ஆசையில் சென்றாராம். ஆனால், வேலை வாங்கி கொடுக்காமல் மகதீர் முகமது சீனா சைபர் மோசடி கும்பலிடம் நீதிராஜனை 3000 அமெரிக்க டாலருக்கு விற்று விட்டு தலைமறைவாகி விட்டார்.

இதை தொடர்ந்து நீதிராஜனை, போலியான பெண் பெயரில் இருந்த பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பார்த்து கொள்ள சொன்னார்களாம். அதுவும் மிகப்பெரிய தொழிலதிபர்களிடம் பெண் போல ஆபாச உரையாடல் செய்து அவர்களை லவ் பண்ண செய்ய வேண்டுமாம். இவர்கள் சொல்லும் நிதி நிறுவனங்களில் அந்த தொழிலதிபர்களை பணத்தை முதலீடு செய்ய சொல்லி பணத்தை அபேஸ் செய்வதையே வழக்கமாக்கி வைத்திருந்தனர்.

இதையும் படிங்க: சிங்கப்பூர் பெண்ணுடன் திருமணம்.. மாதம் 3.5 லட்சம் சம்பளம்.. work pass இல்லாமல் சிங்கை அரசையே ஏமாற்றி வாழ்ந்த வெளிநாட்டு ஊழியர்!

இதில் அவர்கள் சொல் பேச்சு கேட்காத இளைஞர்களுக்கு அடி, உதை, சிறை என சித்திரவதை அனுபவிக்க கூடுமாம். பல மாத போராட்டங்களுக்கு பிறகு நீதிராஜன் இந்திய தூதரகத்தை நாடி உண்மையை கூறி விட்டார். கம்போடியாவில் சட்ட விரோதமாக தங்கி இருந்ததற்காக 2 லட்ச ரூபாயை செலுத்திவிட்டு நாடு திரும்பி இருக்கிறார்.

தன்னை போல 1500க்கும் அதிகமான இளைஞர்கள் அங்கே இருப்பதாகவும் அவர்களை காப்பாற்றி தரும்படியும் கோரிக்கை வைத்து இருக்கிறார். ஏஜென்ட்களை தேர்வு செய்யும் அதிக எச்சரிக்கையாக இருங்கள் எனவும் தெரிவித்து இருக்கிறார். ஏஜென்ட்கள் செய்யும் பித்தலாட்டங்கள் கம்போடியாவில் மட்டுமல்ல சிங்கப்பூரிலும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. நாம் கொஞ்சம் விழிப்புடன் இருக்க வேண்டியதும் முக்கியம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts