TamilSaaga

ஏஜெண்டுக்கு ஒரு ரூபாய் கொடுக்க வேண்டாம்… சிங்கப்பூரில் வேலைக்கு வர கைக்கொடுக்கும் “LinkedIn” – கைக்கு கிடைக்கும் முழு சம்பளம்.. நேரடி அப்பாயிண்ட்மெண்ட்!

15 வருடங்களுக்கு முன்பு, ஃபேஸ்புக் இப்படி ஒரு புரட்சியை ஏற்படுத்தும்-னு யாரும் எதிர்பார்க்கல. “மார்க் ஸக்கர்பெர்க்” இப்படி ஒரு மாற்றத்தை ஏற்பாடுத்துவாருனு யாரும் நம்பல. இன்று முகநூல் எனப்படும் ஃபேஸ்புக் பயன்படுத்தாத நபர் ஒருவர் இருக்கிறார் என்றால், அவருக்கு ஒன்று பார்வை இல்லாமல் இருக்க வேண்டும், அல்லது மொபைலே இல்லாமல் இருக்க வேண்டும். அந்த அளவுக்கு பேஸ்புக் புழக்கம் இன்று உள்ளது.

ஆனால் தற்போது பேஸ்புக் தனது இறுதிக் கட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதே பல வல்லுனர்களின் கருத்தாக உள்ளது. இன்னும் 7 – 8 ஆண்டுகளில் பேஸ்புக் பெரும் வீழ்ச்சியை சந்திக்கலாம் என்று சொல்கிறார்கள். எனினும், 15 வருடங்களுக்கு முன்பு பேஸ்புக் எப்படி இருந்ததோ, இப்போது LinkedIn அப்படி உள்ளது. பலருக்கும் இதுபற்றி தெரிவதில்லை. ஆனால், சைலண்ட்டாக பல சம்பவங்களை செய்து கொண்டிருக்கிறது இந்த LinkedIn.

ஆம்! குறிப்பாக, வேலை தேடுபவர்களின் நம்பர்.1 தளமாக இது உள்ளது. ஏன் தெரியுமா? இந்த LinkedIn-ல் பொழுதுபோக்கிற்கு இடமில்லை. அறிவு, வேலை வாய்ப்பு, அறிவியல், விஞ்ஞானம், இன்றைய தொழில்நுட்ப சூழல் போன்ற விஷயங்கள் மட்டுமே இங்கு பகிரப்படும் அல்லது விவாதிக்கப்படும். ஆகையால், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் தொடங்கி, பெரு நிறுவனங்களின் CEO-க்கள், முதலாளிகள், முக்கிய நிர்வாகிகள், HR எனப்படும் மனித வளத்துறை அதிகாரிகள் ஆகிய அனைவரும் சங்கமிக்கும் ஒரே இடமாக இருப்பது LinkedIn மட்டுமே.

இதில், நீங்கள் உங்கள் Resume-அப்லோட் செய்துவிட்டு, “Open” என்ற ஆப்ஷனை தேர்வு செய்துவிட்டு பாருங்கள். குறைந்தது உங்களுக்கு 2 – 5 இன்டெர்வியூ அழைப்புகள் வந்துவிடும். இடைத் தரகர்களுக்கெல்லாம் இங்கே வேலையே கிடையாது. ஏனெனில், உங்களது Resume-ஐ பார்த்துவிட்டு உங்களை கம்பெனியின் HR நேரடியாக அழைத்துவிடுவார். இந்த LinkedIn-ல் நீங்கள் சிங்கப்பூரில் வேலைக்கு வர எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கே ஸ்டெப் பை ஸ்டெப் தெரிந்து கொள்ளுங்கள்.

www.linkedin.com என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

முதன் முறையாக இதனை பயன்படுத்துபவராக இருப்பின், Sign Up செய்து கொள்ளுங்கள். இதற்கு உங்கள் இ-மெயில் மற்றும் பாஸ்வேர்டு அவசியம்.

அப்டேட் செய்யப்பட்ட உங்களது Resume-ஐ அப்லோட் பண்ணவும்.

பிறகு, “Jobs” என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

தேடல் பட்டியில் “சிங்கப்பூர்” என்பதை டைப் செய்து, அதன் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து “Jobs” என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

Job Function, Industry, Experience போன்றவற்றின் அடிப்படையில் உங்கள் தேடல் முடிவுகளைச் செம்மைப்படுத்த “Filter” ஆப்ஷனை பயன்படுத்தவும்.

பிறகு, Job Listing ஆப்ஷனை ஸ்க்ரோல் செய்து, Job Descriptions மற்றும் Requirements போன்றவற்றை பார்க்கலாம்.

இந்த தேடலில், நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் வேலையைக் கண்டால், “Apply” Button-ஐ கிளிக் செய்து, நிறுவனம் அதில் குறிப்பிட்டிருக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

வேலைக்கு Apply செய்த பிறகு, அதில் உங்களைப் போன்று எத்தனை பேர் விண்ணப்பித்து உள்ளார்கள் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். உங்களது Resume பரிசீலிக்கப்பட்ட பிறகு, HR உங்களை தொடர்பு கொண்டு, உங்களுக்கான இன்டெர்வியூ நாள் மற்றும் நேரத்தை உறுதி செய்வார்.

ஸோ. ஏஜென்ட்டுகளிடம் சென்று பணத்தை வீணடிக்காமல் சிங்கப்பூர் வருவதற்கு LinkedIn ஆப்ஷனை பயன்படுத்தி, மற்றவர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்திக் காட்டுங்கள்.

Related posts