TamilSaaga

உரிமம் பெறாத உணவு நிறுவனத்தில் “கேரட் கேக்” – 2500 வெள்ளி அபராதம் விதித்த சிங்கப்பூர் SFA

சிங்கப்பூரில் முறையான உரிமம் இல்லாமல் உணவு உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்ட நிறுவனத்திற்கு 2,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் உணவு நிறுவனமான SFA கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 11) நீதிமன்றத்தில் உரிமம் இல்லாமல் உணவு உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்ட குற்றத்திற்காக லோ மெங் கீ உணவு மையத்திற்கு தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த நிறுவனம் தனது தொழிற்சாலையில் 30 செனோகோ டிரைவில், கடந்த ஏப்ரல் 2019 வரை உணவு உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிமம் பெற்றிருந்தது. அதன் பிறகு பெரிய சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக அதன் செயல்பாடுகளை நிறுத்தியது என்று SFA தெரிவித்துள்ளது.

இதனையடுத்து புதுப்பிக்கப்பட்ட பிறகு, உணவு உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க SFAலிருந்து ஒரு புதிய உரிமத்தைப் பெற வேண்டிய நிலையில், அந்த நிறுவனம் அந்த உரிமத்தை பெற தவறிவிட்டது என்றும் SFA தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் SFA அதிகாரிகள் புதிதாக புதுப்பிக்கப்பட்ட தொழிற்சாலையில் திடீர் ஆய்வு நடத்தியபோது, ​​லோ மெங் கீ அங்கு குவே மற்றும் கேரட் கேக் தயாரிப்பதை கண்டுபிடித்தனர்.

கடந்த ஆண்டு ஜூலையில் SFA அதிகாரிகள் புதுப்பிக்கப்பட்ட அந்த தொழிற்சாலையில் திடீர் ஆய்வு நடத்தியபோது, ​​லோ மெங் கீ அங்கு சுவீ குவே மற்றும் கேரட் கேக் தயாரிப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சட்டவிரோதமாக உணவு பொருட்களை உற்பத்தி செய்த குற்றவாளிகளுக்கு 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அதே குற்றத்தை செய்பவர்களுக்கு 10,000 வெள்ளி வரை அபராதம் அல்லது மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

Related posts