தமிழ்நாட்டில் உள்ள திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வேலை வந்த ஒருவர், சிங்கப்பூரில் தான் பணியாற்றும் இடத்தில் எதிர்பாராத விதமாக இறந்த நிலையில் அவரது உடல் சொந்த அவரது ஊருக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. நேற்று நவம்பர் 6ம் தேதி காலை அவரது உடல் திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரில் இருந்து எடுத்துவரப்பட்டதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை கழக செயலாளர் திரு. துரை வைகோ தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
குமரவேல் ராஜா என்ற அந்த நபர் சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உமையப்பநாயக்கனூரை சார்ந்த குமரவேல் ராஜா, இங்குள்ள கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்துவந்த நிலையில் சென்ற 03.11 .2021 அன்று இறந்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
அவரது உடலை இந்திய கொண்டுவர கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் முயற்சிகள் நடந்து வந்த நிலையில் அன்று விடுமுறை என்பதால் சில போராட்டங்களுக்கு பிறகு அவரது உடல் நேற்று நவம்பர் 6ம் தேதி காலை 6 மணிக்கு திருச்சி விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. தினம்தோறும் இதுபோன்று இறந்தவர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தவண்ணம் உள்ளது என்ற சோக செய்தியும் நமது தமிழ் சாகா சிங்கப்பூர் நிறுவனத்திற்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
ராஜாவின் உடல் தற்போது அவரது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது, இது குறித்து கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.