TamilSaaga

சிங்கப்பூர் உற்பத்தி துறையில் 10 ஆண்டில் காணாத மிகப்பெரும் வளர்ச்சி

சிங்கப்பூர் உற்பத்தி ஆண்டின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளில் காணாத அளவிலான வளர்ச்சி சென்ற மாதத்தில் பதிவாகி உள்ளது.

உற்பத்தி துறையானது 30 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது. கடந்த ஏழு மாதங்களாக தொடர் உயர்வை கண்டாலும் கடந்த மாதத்தில் பதிவான உயர்வு மட்டும் 10 ஆண்டுகளில் பதிவானதைவிட அதிகமானதாகும்.

மின்கடத்திகளுக்கான தேவைகள் அதிகரித்ததால் Chip உற்பத்தியில் அதிக முதலீடுகள் வந்தது இந்த வளர்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

துல்லியப் பொறியியல் துறையில் மட்டுமே 60 சதவீதம் உற்பத்தி வளர்ச்சி பெற்றுள்ளது.

இப்படி பல்வேறு துறைகள் வளர்ச்சியை காணும் நிலையில் உயிர் மருத்துவத் துறை உற்பத்தி மட்டும் ஏற்றம் காணவில்லை.

கடந்த ஏப்ரல் மாதத்தில் பொருத்தவரை மட்டுமே உற்பத்தி துறை 70 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.

Related posts