TamilSaaga

“சிங்கப்பூர் மருத்துவமனைகளில் பார்வையாளர்களின் வருகைக்கு தற்காலிக தடை” : இன்று முதல் அமலுக்கு வந்தது

இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24) முதல், நான்கு வார மருத்துவமனை வருகை இடைநிறுத்தம் தொடங்கியுள்ளது. காலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்கு (TTSH) ஒரு சில பார்வையாளர்கள் மட்டுமே வந்த நிலையில் அவர்கள் நோயாளிகளை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் அவர்களில் சிலருக்கு மருத்துவமனையில் உள்ள தங்களின் உறவினர்களை பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை முதல் அக்டோபர் 23 வரை இந்த இடைநிறுத்தத்தின் போது, ​​பார்வையாளர்கள் தீவிர நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் மற்றும் புதிதாகப் குழந்தை பெற்ற பெண்கள் போன்றவர்களை பார்க்க குறைந்த அளவிலான ஆட்களே அனுமதிக்கப்படுவார்கள்.

அவ்வாறு குறைந்த அளவில் வருபவர்களும், செல்லுபடியாகும் ஆன்டிஜென் விரைவு சோதனை (ART) அல்லது பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை (PCR) சோதனை முடிவை ஒவ்வொரு வருகையின் 24 மணி நேரத்திற்குள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த கட்டுப்பாடு கோவிட் -19 வழக்குகளின் அதிகரிப்புக்கு மத்தியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மற்றும் மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களிடையே அதிக வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

நேற்று வியாழக்கிழமை, சிங்கப்பூரில் 1,504 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன, இது கடந்த ஆண்டு தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து பதிவான அதிகபட்ச ஒரு நாள் பதிவாகும். சாங்கி பொது மருத்துவமனை நாட்டில் உள்ள பெரிய கிளஸ்டர்களில் ஒன்றாகும், செப்டம்பர் 8 வரை அதன் ஊழியர்களிடையே 58 வழக்குகள் இருந்தன என்பது நினைவுகூரத்தக்கது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி நிறுவனம் TTSH ஐ பார்வையிட்டபோது, ​​மருத்துவமனையின் வார்டு பதிவு பகுதியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதை பொதுமக்களுக்கு நினைவூட்ட அடையாளங்கள் வைக்கப்பட்டிருந்தன.

தங்களுடைய நெருங்கிய சொந்தங்கள் மருத்துவமனையில் இறந்துள்ள நிலையில் அல்லது ஆபத்தான நோய் பட்டியலில் உள்ள நிலையில் ஒரு சிலர் பார்வையாளர் அதற்காக சேவை கவுன்டர்களில் பதிவுசெய்ததை நின்றதை காண முடிந்தது.

Related posts