TamilSaaga

சிங்கப்பூர் Halliburton நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…எப்படி Apply செய்யலாம்?

Halliburton என்பது அமெரிக்கா நாட்டு MNC கம்பெனியாகும். உலகின் இரண்டாவது எண்ணெய் நிறுவனம் இதுவாகும். எண்ணெய் சுத்திகரிப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை பிரித்து எடுப்பது, ஹைட்ரோகார்பன்களில் இருந்து கண்டறிவது உள்ளிட்ட பல சேவைகளை இந்நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கு உலகம் முழுவதிலும் 70க்கும் அதிகமான நாடுகளில் கிளைகள் உள்ளன. உலகம் முழுவதும் இந்நிறுவனத்தில் ஏறக்குறைய 55,000 பேர் பணியாற்றி வருகின்றனர். எண்ணெய் கிணறுகளை நிர்வகிப்பது, வயர்லைன் மற்றும் துளையிடல், நீர்தேக்க சோதனை, பகுப்பாய்வு, திரவ வகுப்பாய்வு உள்ளிட்ட சேவைகளை சிங்கப்பூரில் இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

Halliburton நிறுவனத்திற்கு பல நாடுகளிலும், பல கிளைகளிலும் உள்ள நிறுவனங்களுக்கு machine operator, accountant, sr.software developer உள்ளிட்ட பல வேலைகளுக்கு ஆட்களை எடுத்து வருகிறார்கள். வயது, பாலினம், இனம், மதம், நாடு உள்ளிட்ட எந்த வகையிலும் வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிப்பதற்காக சட்ட ரீதியாக இந்த நிறுவனத்தில் ஆட்கள் எடுக்கப்படுவதாக அந்த நிறுவனமே குறிப்பிட்டுள்ளது.

Halliburton நிறுவனத்தில் apply செய்யும் முறை :

  • முதலில் Halliburton நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று, அந்த நிறுவனம் பற்றியும், அந்த நிறுவனம் அளித்து வரும் சேவைகள் பற்றியும் நன்றக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
  • பிறகு, jobs.halliburton.com/search என்ற இணையதளத்திற்கு சென்று location ஐ முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
  • எந்த கிளையில், என்ன பணிக்கு ஆட்சிகள் தேவை என்ற விபரம் அந்த இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.
  • உங்களுக்கு தேவையான பணியை தேர்வு செய்தால், அந்த பணி குறித்த விபரம், அந்த கிளையின் முகவரி ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும்.
  • இவை அனைத்தையும் சரி பார்த்த பிறகு, apply now என்ற பட்டனை கிளிக் செய்தால் உங்களின் இமெயில் ஐடி, பாஸ்வேர்டு கொடுத்து login செய்யச் சொல்லி கேட்கும்.
  • login செய்து உள்ளே சென்று, அங்கு கேட்கப்பட்டுள்ள இடங்களில் உங்களை பற்றிய சுய விபரங்களை பதிவிட்டு, apply கொடுத்தால் போதும்.

சிங்கப்பூர் தொடர்பான செய்திகளை முழுமையான தகவலோடு பெற இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ் சாகா-வின் வெப்சைட்டை ஃபாலோ பண்ணுங்க!

சிங்கப்பூரில் அன்றாடம் நிகழும் புதுப்புது செய்திகளுக்கு இந்த லிங்கை க்ளிக் செய்து
தமிழ் சாகா சிங்கப்பூர் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Related posts