நமது சிங்கப்பூரில் சீன புத்தாண்டு இன்று (பிப்ரவரி 1) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது என்பதை அனைவரும் அறிவோம். சீனர்களின் வழக்கப்படி புலி ஆண்டினை இன்று மக்கள் வரவேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. எருதுக்கு குட்பை சொல்லிவிட்டு, இந்த பிப்ரவரி 1, 2022 அன்று புலி ஆண்டிற்குள் நுழைகிறோம். தொற்றுநோய் தொடர்ந்து நம்மை ஆட்கொண்டாலும், உரிய பாதுகாப்பு நடைமுறைகளுடன் சிங்கப்பூரர்களாகிய நாம் இந்த சீன புத்தாண்டை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றோம். பல நகரங்களில் பொது விழாக்கள் ரத்து செய்யப்பட்டாலும், உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான குடும்பங்கள் தங்களது வீட்டில் இந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.
சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரும்பாலும் 15 நாட்கள் வரை நீடிக்கும், அந்த காலகட்டத்தில் பல்வேறு பணிகள் மற்றும் செயல்பாடுகள் நடைபெறுகின்றன. (சீனாவில், இது வசந்த விழா என்றும் குறிப்பிடப்படுகிறது) Omicronன் பரவல் இந்த ஆண்டு மக்களின் கொண்டாட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், நேர்மறையானவற்றில் கவனம் செலுத்துங்கள் மற்றும் நல்ல செயல்களை செய்யுங்கள் என்று பலரும் கூறி வருகின்றனர்.
நமது பிரதமர் லீ ஹஸின் லூங், ஜனாதிபதி ஹலீமா யாக்கோப் உள்ளிட்ட பலரும் தங்களது சீன புத்தாண்டு வாழ்த்து செய்திகளை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று chinatown பகுதியில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்படும் செய்யப்பட்டுள்ளது. இந்த இனிமையான நேரத்தில் சிங்கப்பூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சந்திர தேவா என்ற தமிழரும் தனக்கு கிடைத்த ஒரு அன்பு பரிசினை குறித்து தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
சந்திர தேவா, தான் பணியாற்றும் நிறுவனத்தின் முதலாளியிடம் இருந்து Ang Poa எனப்படும் சிவப்பு வண்ண பரிசு உறையையும், போனஸ் பணத்தையும் பெற்றதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்கிர்ந்துள்ளார். பல இன மக்கள் ஒன்றாக வாழும் நமது சிங்கப்பூரில் இந்த புலிகளின் ஆண்டன சீன புத்தாண்டில் தமிழர் ஒருவர் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது நம் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியை அளிக்கின்றது என்றே கூறலாம். பிறந்திருக்கும் இந்த சீன புத்தாண்டில் நம்மை ஆட்கொண்டுள்ள இந்த தொற்றின் தடயம் மறைந்து விரைவில் அனைவரும் முகமூடி இல்லாத வாழ்க்கைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு பாதுகாப்பாக பயணிப்போம்.
News Source : Chanthira Deva Facebook Page
சிங்கப்பூர் வாழ் சீன மக்கள் மற்றும் சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் உங்கள் தமிழ் சாகா சிங்கப்பூரின் இனிய சீன புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.