சிங்கப்பூர்வாசிகள் இந்த ஆண்டு முதல் ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் ஒரு புதிய கண்கவர் அம்சத்தை எதிர்பார்க்கலாம் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. “Jurassic Park”, கோடி ஆண்டுகளுக்கு முன்பு நாம் வாழ்ந்த இதே மண்ணில் வாழ்ந்த உயிரினம் தான் டைனோசர்கள். ஆனால் இனி அதை Jurassic என்று அழைப்பதைவிட நாம் அதை Jewel-rassic என்றே அழைக்கலாம். ஆம் Jewel-rassic Quest என்ற பெயரில் டிக்கெட் எடுத்து இந்த அற்புதத்தை நீங்கள் ரசிக்கலாம். Canopy Park மற்றும் Shiseido Forest Valleyயில் இதனை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.
இது AR என்று அழைக்கப்படும் (ஆக்மென்டட் ரியாலிட்டி) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுமார் 89 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திற்கு பார்வையாளர்களை அழைத்துச்செல்லும். பல டைனோசர்களை நீங்கள் கண்டு மகிழலாம். இருப்பினும், தற்போதைய காலகட்டத்தில் இது குறித்த தகவல்கள் குறைவாகவே உள்ளன. டிக்கெட் விலை மற்றும் என்னென்ன இருக்கும் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்தின் (STB) 2021 ஆண்டு மதிப்பாய்வு செய்தியாளர் மாநாட்டில் இந்த வரவிருக்கும் புதிய அம்சம் குறித்து அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் இந்த 2022ம் ஆண்டிற்கான புதிய மற்றும் புத்துணர்ச்சியூட்டும் இடங்களைக் காணும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த மாநாட்டின் போது, சிங்கப்பூர் 3,30,000 சர்வதேச பார்வையாளர் வருகையை (IVA) பதிவு செய்துள்ளதாகவும், கடந்த 2021 இல் சுற்றுலா ரசீதில் S$1.9 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் STB தெரிவித்துள்ளது.
“காரை கம்மியா ஓட்டுனா காசு” : சிங்கப்பூரில் அறிமுகமான புதிய வகை Motor Insurance – முழு விவரம்
மேலும் கடந்த 2020 ஆண்டினை ஒப்பிடும்போது, நாடு சுற்றுலா ரீதியாக சரிவை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.