சிங்கப்பூர் அரசு அடுத்த மாதம் மேலும் ஆறு நாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பயணப் பாதைகளை (VTLs) விரிவுபடுத்தும் என்று சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) நேற்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 26) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வரும் டிசம்பர் 14 முதல், தாய்லாந்தில் இருந்து பயணிகள் தனிமைப்படுத்தப்படாத VTLன் கீழ் சிங்கப்பூருக்குள் நுழையலாம். மேலும் கம்போடியா, பிஜி, மாலத்தீவு, இலங்கை மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் டிசம்பர் 16 முதல் அவ்வாறு செய்யலாம்.
இதையும் படியுங்கள் : 7 நாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்த MOH
இந்த சமீபத்திய நடவடிக்கை மூலம் சிங்கப்பூர் தனது VTL ஏற்பாடுகளைக் கொண்ட நாடுகளின் எண்ணிக்கையை 27 ஆக அதிகரிக்கும். கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர், சாங்கி விமான நிலையத்திற்கு தினசரி வருகை தந்தவர்களில் 60 சதவிகிதம் பேர் இந்த 27 நாடுகளை சேர்ந்த மக்கள் தான் என்று CAAS தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூரின் “இந்த சமீபத்திய நீட்டிப்பு சாங்கியின் நெட்வொர்க்கை மேலும் விரிவுபடுத்துவதோடு, உலகளாவிய இணைப்புடன் ஒரு சர்வதேச விமானப் போக்குவரத்து மையமாக சிங்கப்பூரின் நிலையை மீட்டெடுக்கவும் மீண்டும் கட்டமைக்கவும் உதவும்” என்று ஆணையம் கூறியது. மேலும் சமீபத்திய நீட்டிப்பு மூலம், தினசரி VTL ஒதுக்கீடு பயணத்தில் 10,000 முதல் 15,000 பயணிகளாக உயர்த்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நேற்று வெள்ளியன்று ஒரு மெய்நிகர் ஊடக சந்திப்பில் பேசிய போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன், சிங்கப்பூரின் VTL மூலம் வரும் பயணிகளின் அளவு என்பது தொற்று நோய்க்கு முந்தய அளவில் மூன்றில் ஒரு பங்கு உள்ளதாக உள்ளது என்றார்.