TamilSaaga

சிங்கப்பூர் – இந்தியா பயணம்.. எந்தெந்த Airlines-ல் எவ்வளவு Baggage கொண்டு செல்லலாம்? தடுமாற்றமின்றி Extra Baggage சேர்ப்பது எப்படி?

வெளிநாட்டு பயணம் என்பது தற்போது உள்ள இந்த நவநாகரீக உலகத்தில் மிகவும் எளிதான ஒன்றாக தற்போது மாறிவிட்டது. ஆனால் இந்த பெருந்தொற்று காலத்தில் நோய் பலரால் தங்களுடைய வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளனர் மக்கள். விமான நிலையங்கள் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் பெரிய அளவில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மக்களால் பெருந்தொற்று அச்சத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை என்றே கூறலாம்.

“சிங்கப்பூரில் டைனோசரை பார்க்கலாம்” : Jurassic இல்ல இனி Jewel-rassic – மெருகேறும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம்

இதுஒருபுரம் இருக்க வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் மக்கள் பல ஆண்டுகளாக எத்தனை கிலோ Baggage எடுத்து செல்லவது என்பதில் சற்று குழப்பத்துடனே இருந்து வருகின்றனர் என்றே கூறலாம். Baggage என்பது முற்றிலும் நீங்கள் பயணம் செய்யும் விமான சேவை நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டதே. இந்நிலையில் தற்போது சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகம் வரும் பயணிகள் எவ்வளவு baggage கொண்டு செல்லலாம். அதே போல கூடுதலாக Baggage கொண்டு செல்ல எந்தெந்த விமான சேவை நிறுவனங்கள் அனுமதி அளிக்கின்றது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம்

Normal – 30 கிலோ Baggage மற்றும் 7 கிலோ Hand Luggage
கூடுதலாக Baggage எடுத்து செல்ல முடியாது

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

Normal 20 கிலோ Baggage மற்றும் 7 கிலோ Hand Luggage,
கூடுதலாக 10 கிலோ வரை, எடுத்துச்செல்லலாம். (கூடுதல் கிலோவிற்கு தனி கட்டணம்)

இண்டிகோ விமான சேவை நிறுவனம்

Normal 20 கிலோ Baggage மற்றும் 7 கிலோ Hand Luggage,
கூடுதலாக 20 கிலோ வரை எடுத்து செல்ல முடியும் (கூடுதல் கிலோவிற்கு தனி கட்டணம்)

“11.8 பில்லியன் வெள்ளி அளவிற்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது சிங்கப்பூர்” – 17,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

Normal 25 கிலோ Baggage மற்றும் 7 கிலோ Hand Luggage,
கூடுதல் Baggage எடுத்துசெல்லமுடியாது.

Fly Scoot Tiger

Normal 20 கிலோ Baggage மற்றும் 7 கிலோ Hand Luggage,
கூடுதலாக 20 கிலோ வரை எடுத்து செல்ல முடியும் (கூடுதல் கிலோவிற்கு தனி கட்டணம்)

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் Vistra

Normal – 30 கிலோ Baggage மற்றும் 7 கிலோ Hand Luggage
கூடுதலாக Baggage எடுத்து செல்ல முடியாது

All rates are subjected to airlines rules

New Source : நந்தனா ஏர் டிராவல்ஸ், திருச்சி

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts