TamilSaaga

சிங்கப்பூர் Tampines பகுதி குடியிருப்பு.. “திடீரென்று வெடித்த தரை” : அருகில் இருந்த குழந்தை – என்ன நடந்தது?

சிங்கப்பூர் Tampines சாலை 45ல் உள்ள HDB அடுக்குமாடி குடியிருப்பின் வரவேற்பறையில் இருந்த தரை கடந்த ஜனவரி 22, சனிக்கிழமை மாலை திடீரென வெடித்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து Facebookல் வெளியான அந்த காணொளியில் உரத்த சத்தம் மற்றும் விரிசல் ஏற்பட்ட தருணத்தை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன. அதைத் தொடர்ந்து தரையில் திடீரென தன்னிச்சையாக மேல்நோக்கி வெடித்து, ஒரே நேரத்தில் பல ஓடுகள் துண்டு துண்டாக உடைந்தன.

“காரை கம்மியா ஓட்டுனா காசு” : சிங்கப்பூரில் அறிமுகமான புதிய வகை Motor Insurance – முழு விவரம்

இந்த வெடிப்பு சம்பவம் நடந்தபோது பச்சிளம் குழந்தை ஒன்றும் அந்த குழந்தையின் பாட்டியும் அந்த வெடிப்புக்கு மிக அருகாமையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்த விவரங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை அந்த வீட்டு உரிமையாளர் கடந்த ஜனவரி 23ல் பேஸ்புக்கில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பதிவில், வீட்டின் உரிமையாளர் தனது மனைவி, சிறு குழந்தை மற்றும் மாமியார் ஆகியோர் வீட்டில் இருந்ததாகவும், அப்போது தீடீரென்று அந்த ஓடுகள் வெடித்ததாகவும் கூறினார். அப்போது அந்த நபர் வேலையில் இருந்துள்ளார். மேலும் இச்சம்பவம் இரவு 7.35 மணிக்கு முன்பு நடந்ததாக அந்த காட்சிகள் காட்டுகின்றன.

அந்த தரை வெடிப்பதற்கு முன், ஒரு விரிசல் சத்தம் கேட்ட நிலையில் அந்த வீட்டு உரிமையாளரின் மாமியார் அந்த அறையை நோக்கி வந்ததை நம்மால் அந்த காணொளியில் காணமுடிந்தது. அப்போது தனது பேரக்குழந்தையை நோக்கி அவர் சென்றபோது தான் தரையில் இருந்த டைல்ஸ் வெடித்தது. அங்கிருந்த மூவரும் பயத்தில் உறைந்த நிலையில் பிளாட் முற்றிலும் உருகுழையப்போகிறது என்று எண்ணி அங்கிருந்து கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு வெளியில் ஓடியுள்ளார். ஆனால் இது ஒரு தரை வெடிப்பு மட்டும் தான் என்று இருப்பினும் அவர்கள் செய்தது சரியான செயலென்றும் அவர் கூறினார். நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

“சிங்கப்பூரில் அதிகரித்து வரும் பணவீக்கம்?” – எதிர்கொள்ள Sing dollar கொள்கையை கடுமையாக்கும் MAS

கடந்த ஜனவரி 2020ல், அப்போதைய தேசிய மேம்பாட்டு அமைச்சராக இருந்த லாரன்ஸ் வோங், 2019ம் ஆண்டில் HDB அடுக்குமாடி குடியிருப்புகளில் சராசரியாக மாதத்திற்கு 247 தரை வெடிப்பு வழக்குகள் பதிவாகி வருவதாக கூறினார். இந்த வெடிப்புக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது, சிங்கப்பூர் மட்டுமல்ல பல நாடுகளில் இந்த டைல்ஸ் வெடிப்பு சம்பவங்கள் பெரிய அளவில் அரங்கேறித்தான் வருகின்றது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts