TamilSaaga

5வது படித்திருந்தால் போதும்.. டூரிஸ்ட் விசாவில் வந்தாலும் வேலை.. பத்தே நாட்களில் விசா.. மாதம் 2 லட்சம் வரை சம்பளம் – ஓர் “விவசாயி” கொடுக்கும் “ஆச்சர்ய” அப்டேட்!

வெளிநாடுகளில் வேலைப்பார்க்கச் செல்பவர்களின் நோக்கம் அல்லது காரணம் இவையாகத் தான் இருக்க முடியும்.

வாங்கிய கடனை அடைக்க,
அதிகமாக அதேசமயம் விரைவாக சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக.

ஆனால், பெரும்பாலானோர் வெளிநாடு என்றாலே அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா என்ற வட்டத்திற்குள் அடங்கிவிடுகின்றனர். இந்த நாடுகளுக்கு அப்பால், நீங்கள் நல்ல சம்பளத்துக்கு வேலைக்கு செல்ல சில ஆச்சர்ய தகவலை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார் “நம்ம விவசாயி” என்று அறிமுகமாகும் தினேஷ் மூர்த்தி.

“நாமக்கல் டூ லண்டன்” என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர், 31 ஆயிரத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்ஸ்களை வைத்திருக்கிறார். இவர் அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோவில், ஃபின்லாந்து நாட்டில் வேலைக்கு செல்வது குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆனால், அந்த தகவல்கள் அனைத்தும் ‘அட.. உண்மையாவா!’ ரகத்தில் உள்ளன.

மேலும் படிக்க – திருச்சியில் இருந்து சிங்கப்பூர் கிளம்பிய விமானம்.. கேபினில் இருந்து அலறிய சப்தம்.. 30,000 அடி உயரத்தில் தகதகவென பற்றிய தீ.. 10 நிமிடத்தில் அனைவரையும் கலங்க வைத்த “சம்பவம்”!

இதுகுறித்து அவர் கூறுகையில், “ஃபின்லாந்து நாட்டில் வேலைக்கு சேர அதிகமான போட்டிகள் கிடையாது. இங்கு ஒரு மணி நேரத்தில் 20 யூரோ சம்பளம் வழங்கப்படுகிறது. ஓவர் டைம் செய்தால், ஒன்றரை மடங்கு முதல், 2 மடங்கு வரை ஊதியம் கிடைக்கிறது. வாரத்திற்கு குறைந்தபட்சம் 37.5 மணி நேரங்கள் வேலை கிடைக்கிறது. வாரத்திற்கு போதுமான விடுமுறையும் உள்ளது.

இங்கு 1000 யூரோ வரை Tax கிடையாது. வருடத்திற்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் உண்டு. தொடர்ந்து 5 வருடங்கள் வேலை செய்தால் Finland அரசாங்கத்தால் PR வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஒரு வருடம் வேலை செய்தால் EU BLUE CARD வழங்கப்படுகிறது.

இங்கு வேலை செய்ய குறைந்தபட்ச ஆங்கில அறிவு அல்லது Google Translate பயன்படுத்தத் தெரிந்திருந்தால் போதுமானது. டூரிஸ்ட் விசாவில் வந்தாலும் உங்களுக்கு வேலை செய்ய அனுமதி உண்டு. ஆனால், நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்களோ, அந்த நிறுவனத்திடம் இருந்து Job Offer பெற்று அதனை சமர்ப்பிக்க வேண்டும். குறைந்தபட்சம் 5ம் வகுப்பு படித்திருந்தாலே இங்கு வேலைக்கு செல்ல முடியும். அதற்கு மேல் படித்திருப்பவர்களுக்கு, அவர்களின் படிப்புக்கு ஏற்றார் போல் வேலை கிடைக்கும்.

இங்கு வேலைக்கு செல்ல அப்ளை செய்வது எப்படி?

Monster Finland: https://www.monster.fi/
LinkedIn: https://www.linkedin.com/jobs/finland-jobs
Indeed Finland: https://www.indeed.fi/
Jobs in Helsinki: https://www.jobsinhelsinki.com/
Glassdoor Finland: https://www.glassdoor.com/Job/finland-jobs-SRCH_IL.0,7_IN71.htm
CareerJet Finland: https://www.careerjet.fi/
Finnish Startup Jobs: https://fstartupjobs.com/
EURES – The European Job Mobility Portal: https://ec.europa.eu/eures/public/en/homepage
Jobspin Finland: https://www.jobspin.fi/
Ministry of Economic Affairs and Employment of Finland: https://tem.fi/en/frontpage

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த வெப்சைட்டுகள் மூலம், Finland-ல் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும்.

Related posts