TamilSaaga

“காரை கம்மியா ஓட்டுனா காசு” : சிங்கப்பூரில் அறிமுகமான புதிய வகை Motor Insurance – முழு விவரம்

சிங்கப்பூரர்களுக்கு பொதுவாகவே அவர்களின் கார்களின் மீது ஒரு அலாதி பிரியம் உண்டு, அதுவும் இந்த கொரோனா காலத்தில் கொஞ்ச நேரம் மாஸ்க் இல்லாமல் தனிமையில் காரில் செல்வதை பலரும் விரும்புகின்றனர். அதே போல தற்போது மற்றுமொரு உண்மையும் வெளியாகியுள்ளது. அதாவது 2021ம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் கார்களின் எண்ணிக்கை 4 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், சிங்கப்பூரில் சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் இந்த தொற்று காலத்தில் அதை மிகவும் குறைவாகவே ஓட்டுகிறார்கள் என்பதைக் கண்டறிந்துள்ளன ஆய்வு முடிவு.

இதையும் படியுங்கள் : ஒருவித மயான அமைதி – வெறிச்சோடிய விமான நிலையம் : இருந்தது இரண்டே பயணிகள் தான்

அவர்கள் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, மேலும் ஒருவரின் சமூக வட்டத்தின் அளவு குறைந்துவிட்டது. ஹேங்கவுட் செய்வதற்கும் இந்த தடை காலத்தில் குறைவான பொது இடங்களே உள்ளன. இப்படி ஒரு நிலை இருக்க உங்கள் காரை விற்றுவிடலாம் என்ற கருத்தை கூட நீங்கள் யோசித்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், கார் உரிமையாளர்கள் தங்கள் கார்களைப் பயன்படுத்தாததற்காக பணம் பெற்றால் எப்படி இருக்கும் என்று எப்போவாதது யோசித்தது உண்டா நீங்கள். என்னது கார் ஓட்டாமல் இருந்தால் காசு கிடைக்குமா? என்று நீங்கள் ஆச்சர்யப்படுவது புரிகிறது. வாருங்கள் விளக்கமாக காணலாம்.

சிங்கப்பூரில் Tiq by Etiq என்ற நிறுவனம் தற்போது புதிய “Drive Less Save More” என்ற மோட்டார் இன்சூரன்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இருப்பிட கண்காணிப்பு சாதனம் இல்லாமல் பயன்பாட்டு அடிப்படையிலான மோட்டார் காப்பீட்டு தள்ளுபடியை வழங்கும் முதல் காப்பீட்டாளர் இதுவாகும். புதிய மற்றும் ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசிகளை புதுப்பித்துக்கொள்வதன் மூலம் அடிப்படை பிரீமியத்தில் 30 சதவீதம் வரை தள்ளுபடியும் பெறலாம்.

இது எப்படி சாத்தியம்?

உங்களால் ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடந்து உடல் சுறுசுறுப்புடன் ரிவார்டுகளைப் பெற முடிந்தால், இந்தப் புதிய காப்பீட்டுத் திட்டத்திற்குப் பதிவுசெய்வது ஒரு நல்ல வழி. புதிய வாடிக்கையாளர்களுக்கு, “Drive Less Save More” அம்சத்துடன் புதிய தனியார் கார் விரிவான காப்பீட்டுத் திட்டத்தில் பதிவுசெய்தால் போதும். Etiqa ஆப் மூலம் பாலிசி தொடங்கும் தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன் “Drive Less Save More” என்பதைச் செயல்படுத்தினால் போதும். அதன் பிறகு வாடிக்கையாளர்கள் காரின் ஓடோமீட்டர் ரீடிங் மற்றும் கார் நம்பர் பிளேட்டின் படத்தை Tiq by Etiqa ஆப் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். கார் ஓடோமீட்டர் ரீடிங்கை அவர்கள் விரும்பும் நேரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் அடிக்கடி பதிவேற்றலாம், ஆனால் ஒவ்வொரு பதிவேற்றத்திற்கும் இடையே குறைந்தபட்சம் 10 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் Siloso Beach.. Bikini உடையில் வந்த பெண்களிடம் “சில்மிஷம்” செய்த நபர் – பெண்கள் செய்த தரமான சம்பவம்

இதன் மூலம் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் Tiqக்கு S$1,200 செலுத்தினால், ஒரு வருடத்தில் S$360 வரை பணமாக நீங்கள் திரும்ப பெறலாம். குறைவான பயணம் என்பது காரில் பயணம் செய்வதை முற்றிலுமாக கைவிடுவது என்று அர்த்தமல்ல. சிங்கப்பூரின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள், உள்ளூர் வசதிகள் அருகாமையில் இருப்பதால், ஒரு நாளைக்கு 14 கி.மீ.க்கும் குறைவான பயணம் செய்வது மிகவும் சாத்தியம். ஒரு வார காலப்பகுதியில், கார் உரிமையாளர்கள் அதிகபட்சமாக 30 சதவீத தள்ளுபடிக்கு தகுதி பெற 98 கிமீ வரை காரை ஓட்டலாம்.

மூன்று வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளரின் TiqConnect eWalletல் பண தள்ளுபடிகள் வரவு வைக்கப்படும். இல்லையெனில், வாடிக்கையாளர்கள் eWallet இலிருந்து தள்ளுபடியை உடனடியாகவும் நேரடியாகவும் தங்கள் வங்கிக் கணக்கில் அல்லது PayNow செயலுக்கு எடுத்துச்செல்லலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts