TamilSaaga

முப்பது அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி.. சிங்கப்பூரில் மேலும் ஒரு பணியிட மரணம் – நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்திய MOM

சிங்கப்பூரில் 49 வயதான உள்ளூர்த் தொழிலாளி ஒருவர் கூரையைச் சுத்தம் செய்யும் பணியைச் செய்யத் தயாராகிக்கொண்டிருந்தபோது, ​சுமார் 9.5மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு நிறுவனமான வினா ஸ்பெஷலிஸ்ட் மூலம் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஃப்ரீலான்ஸ் தொழிலாளியான அவர், Ng Teng Fong பொது மருத்துவமனை கொண்டு சென்ற சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

கடந்த மே 19 அன்று அவர் மரணித்த நிலையில் இந்த ஆண்டு சிங்கப்பூரில் பதிவான மொத்த பணியிட இறப்புகளின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு இந்த அளவிலான தொழிலாளர்கள் பணியிடத்தில் இறப்பது இப்பொது தான் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“கொஞ்சம் த்ரில்லிங்காத்தான் இருக்கும் போல”.. சிங்கப்பூரில் பலநூறு அடி உயரத்தில் சினிமா பார்க்க ரெடியா? Marina Bay Sands ஹோட்டலின் புதிய முயற்சி!

இது விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், மேலும் அந்த தலத்தில் உயரத்திற்கு சென்று தொழிலாளர்கள் வேலைசெய்ய வேண்டியுள்ள பணி நடவடிக்கைகளையும் நிறுத்துமாறும் Vina Specialist நிருவத்திற்கு MOM தெரிவித்துள்ளது.

பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட மலேசியார்.. மனைவி மற்றும் குழந்தையின் கண் முன்னே நடந்த கொடூரம் – இறந்தவர் தமிழரா?

அதேபோல கடந்த வியாழனன்று (மே 26) 190 ஆர்ச்சர்ட் பவுல்வர்டில் மற்றொரு பணியிட விபத்து ஏற்பட்டுள்ளது. இது காஜிமா ஓவர்சீஸ் ஆசியா நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடமாகும், சம்பவத்தன்று காலை 9 மணியளவில் 29 வது மாடியில் லிப்ட் ஷாஃப்ட்டின் ஃபார்ம்வொர்க் பாகம் அகற்றப்பட்டபோது, 14 வது மாடியில் இருந்த வங்காளதேச தொழிலாளி மீது மோதியது.

Xiang Tai என்ற கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் 31 வயதான அந்த தொழிலாளி, முதுகில் ஏற்பட்ட காயத்திற்காக Tan Tock Seng மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts