TamilSaaga

“கொஞ்சம் த்ரில்லிங்காத்தான் இருக்கும் போல”.. சிங்கப்பூரில் பலநூறு அடி உயரத்தில் சினிமா பார்க்க ரெடியா? Marina Bay Sands ஹோட்டலின் புதிய முயற்சி!

சிங்கப்பூரில் உணவு அருந்திவிட்டு திரைப்படங்களுக்குச் செல்வது உங்களுக்கு வழக்கமான ஒன்றாக உள்ளதா, இனி அதையே சற்று சுவாரசியமாக மாற்ற புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது, அதுவும் 56வது மாடியில்.

சிங்கப்பூரின் “மரினா பே சாண்ட்ஸ்” எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை 2022ல் “திரைப்படங்களை வானில் திரையிட” ஏற்பாடு செய்துள்ளது. வானில் என்றால் வானத்தில் இல்லை, மரினா பே சாண்ட்ஸ் ஹோட்டலில் உள்ள “Sky Park Observation Deckல்” நடக்கவிருக்கும் திரையிடல்களை மக்கள் காணலாம்.

வருகின்ற ஜூன் 9 முதல் ஜூலை 2 வரை, “Movies in the Skyயில்” மொத்தம் 12 திரைப்படங்கள் திரையிடப்படும், அவை ஒவ்வொரு வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 8:30 மணிக்கு திரையிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“அவருக்கு ஒரு Beer வாங்கித்தரனும்”.. சிங்கப்பூரில் பணத்தை தொலைத்த வெளிநாட்டவர் – பைசா குறையாமல் அப்படியே கிடைத்த Purse!

அவுட்டோர் சினிமா ஸ்டார்ட்-அப் சினிவாவ் என்ற நிறுவனத்துடன் இணைந்து, சிங்கப்பூரின் ஸ்கைலைன் பின்னணியில் நடக்கும் இந்த திரையிடலை மக்கள் ஆனந்தமாக ரசிக்கலாம். நிச்சயம் பலநூறு அடி உயரத்தில் சினிமா பார்ப்பது மக்களுக்கு புது அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சிங்கப்பூர் Gambas Crescentல் ஏற்பட்ட இரசாயன கசிவு.. 20 பேர் உடனடியாக வெளியேற்றம் – போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த SCDF

மேலும் இந்த நிகழ்விற்கான டிக்கெட்டுகளின் விலை S$48 (Per Pax) ஆகும், இதில் SkyPark அப்சர்வேஷன் டெக்கிற்காண (S$26) நுழைவு கட்டணமும் அடங்கும். பார்வையாளர்கள் வெளிப்புற உணவு மற்றும் பானங்களை அரங்கிற்கு கொண்டு வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று மெரினா பே சாண்ட்ஸின் செய்தித் தொடர்பாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts