TamilSaaga

நடுவானில் Cockpitக்குள் சல்லாபம்.. மாணவியுடன் பயிற்சி விமானி எடுத்த “கீழ்த்தரமான வீடியோ” – இறுதியில் இருவருக்கும் செக் வைத்த நிறுவனம்!

காக்பிட்டில் (Cockpit) பயிற்சிக்காக வந்த பெண் ஒருவருடன் சல்லாபமாக இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்ட ரஷ்ய விமானி ஒருவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்யாவில் உள்ள Sasovo Flight School of Civil Aviationல் பணியாற்றி வரும் அந்த விமான பயிற்றுவிப்பாளரும் மாணவி ஒருவரும் தாங்கள் உல்லாசமாக இருப்பதை படம்பிடிப்பதற்காக விமானத்தை Auto-Pilot முறையில் போட்டுவிட்டு இந்த வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த பயிற்சி விமானி, தன்னுடன் உடலுறவில் ஈடுபட்டால் கூடுதலாக சில பாடங்களை கற்றுத்தருவதாக அந்த பெண்ணிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 28 வயதான அந்த விமானி ரஷ்யாவின் ரியாசான் பகுதியில் செஸ்னா 172 ரக விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர் Gambas Crescentல் ஏற்பட்ட இரசாயன கசிவு.. 20 பேர் உடனடியாக வெளியேற்றம் – போராடி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்த SCDF

இந்நிலையில் ரகசியமாக எடுக்கப்பட்ட அந்த வீடியோவை மற்றொரு மாணவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து, குறிப்பிட்ட அந்த விமானப் பள்ளி அவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்துள்ளது. ஆனால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்படுவதற்கு முன்பே அந்தப் பெண் ராஜினாமா செய்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

அந்த நபர் திருமணமானவர் என்பதால் அந்த பெண் முதலில் வீடியோ எடுக்க மறுத்துவிட்டதாகவும், ஆனால் அவர் கூடுதல் வகுப்புகளை வழங்குவேன் என்று கூறியதால் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts