அண்மையில் சிங்கப்பூருக்கு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து கடந்த 21 நாட்களை ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கழித்தவர்கள் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சிங்கப்பூரர்கள், நிரந்திர குடியுரிமை வாசிகள் மற்றும் நீண்டகால அனுமதி வைத்திருப்போர் சிங்கப்பூர் வந்ததும் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
வீட்டில் தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்ததும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு சற்று தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
விக்டோரியா நகரத்தில் இருந்து சிங்கப்பூர் வருபவர்கள் கொரோனா பதிவில் நோய் தொற்று இல்லை என்று உறுதியானால் 7 நாள் தனிமைப்படுத்துதல் அனுசரிக்க தேவையில்லை என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.