TamilSaaga

“சிங்கப்பூரில் வங்கி கணக்கு மோசடி” : சேமிப்புகளை இழக்கும் அப்பாவி மக்கள் – களமிறங்கும் சிங்கப்பூரின் SNDGG

சிங்கப்பூரில் வாங்கிகள் தொடர்பான மோசடிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பொதுமக்களுடன் தொடர்புகொள்வதில் SMS மற்றும் கிளிக் செய்யக்கூடிய இணைப்புகளைப் பயன்படுத்துவதை குறித்து சிங்கப்பூர் அரசாங்கம் மதிப்பாய்வு செய்கிறது. அண்மையில் OCBC வாடிக்கையாளர்கள் சுமார் S$8.5 மில்லியன் அளவிற்கு பணத்தை ஆன்லைன் வங்கி மோசடிகளில் இழந்த நிலையில் அரசு இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது.

“சிங்கப்பூரில் ஏற்கனவே வேலை பார்த்த Construction UTURN அதிக அளவில் தேவை” – உடனே Apply செய்யலாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களை வங்கியை போல கட்டிக்கொண்டு மோசடி செய்பவர்களிடமிருந்து ஒரு SMS வந்தது. அந்த SMSல் அவர்களின் வாங்கி கணக்குகள் அல்லது கிரெடிட் கார்டில் சிக்கல்கள் இருப்பதாகக் கூறி OTP போன்ற சில முக்கிய தகவலைகளை பெற்று பணத்தை அந்த பிரிகின்றது. இந்த டிஜிட்டல் யுகத்தில் “ஸ்மார்ட்ஃபோன் அணுகல் அதிகமாக இருந்தாலும், ஸ்மார்ட்போன்கள் சொந்தமாக இல்லாத Appகளை பயன்படுத்தாத குடிமக்களுக்கும் இந்த SMS தகவல்தொடர்புகள் பரவலான அணுகலை தருகின்றது” என்று SNDGG வெளியிட்ட அறிக்கையில் கூறியது.

கிளிக் செய்யக்கூடிய இணைப்புகளை SMSல் இருந்து அகற்றுவது ஒரு சிறந்த முறையாக இருந்தாலும் மோசடி கும்பல்கள் ஈமெயில் போன்ற வேறு வழிகளின் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றக்கூடும் என்றும் SNDGG தெரிவித்துள்ளது. ஆகவே அரசாங்க நிறுவனங்கள் தற்போது “.gov.sg” என்று முடிவடையும் இணைப்புகளை அனுப்ப வேண்டும் என்றும், இதனால் பொதுமக்கள் நம்பகமான இணைப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும் என்றும் கூறப்படுகிறது. மேலும் “அனைத்து ஏஜென்சிகளும் இந்த விதியைக் கடைப்பிடிப்பதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்றும். இணைப்பைக் கிளிக் செய்வதற்கு முன், அது சரியான அரசாங்க இணைப்பு என்பதைச் சரிபார்ப்பது குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அதிகரிப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் பிரபல Cryptocurrency Exchange நிறுவனம்.. கை வைத்த ஹேக்கர்கள் – 400 பயனர்களின் பணம் “சுவாஹா”

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக SenderID பாதுகாப்பு பதிவேட்டில் அனைத்து அரசு நிறுவனங்களையும் இணைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. “இது மோசடி கும்பல்கள், அரசு நிறுவனங்களை போல ஏமாற்ற முடியாத அளவிற்கு கடுமையானதாக இருக்கும் மேலும் மோசடி செய்பவர்களை பிடிக்க உள்துறை அமைச்சகத்தின் முயற்சிகளை இது எளிதாக்கும்” என்று SNDGG கூறியது. மோசடி செய்திகள் மற்றும் அழைப்புகள் பயனர்களைச் சென்றடைவதைத் தடுக்க பயனர்கள் ScamShield என்ற செயலியை பயன்படுத்தலாம் என்று SNDGG தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts