TamilSaaga

சிங்கப்பூரில் ஒரு “தீப்பொறி திருமுகம்”.. வீட்டில் வெடிகுண்டுகளை தயாரித்த பொறியியல் மாணவர்.. ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் வெடிக்கச் செய்தது அம்பலம்

சிங்கப்பூரில் தனது வீட்டிலேயே வெடிகுண்டுகளை தயாரித்த பொறியியல் மாணவர் (வயது 19) ஒருவர் அவற்றில் ஒன்றை ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் பற்றவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவம் 2020ம் ஆண்டு நடந்திருக்கிறது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

குழந்தைகள் மற்றும் இளம் வயதுடையோர் சட்டத்தின் கீழ் 18 வயதை அடையும் முன் அவர் இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் அவரது பெயரை வெளியிட முடியாது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2020 இல் பெருந்தொற்று காலத்தின் போது, ஆயுதங்கள், வெடிகுண்டு தயாரித்தல், ஸ்பார்க்லர் குண்டுகள் மற்றும் பிற வெடிபொருட்கள் பற்றி ஆன்லைனில் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.

இது அவரை pipe bombs தயாரிப்பு பற்றி படிக்க வழிவகுத்தது. மேலும் அந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் அதனை உருவாக்க முடிவு செய்தார்.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் வேலைத் தேடி.. வடிகால் வழியாக ஊர்ந்து சென்றே கட்டுமானத் தளத்திற்குள் நுழைந்த நபர் – வசமாக சிக்கிய சம்பவம்

இந்நிலையில், ஜூன் 7 2020 அன்று, அந்த நபர் தனது நண்பரை ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் சந்தித்து, மேம்படுத்தப்பட்ட பைப் குண்டுகளை வெடிக்கச் செய்ய அமைதியான இடத்தைக் கண்டுபிடிக்க திட்டமிட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் துணை அரசு வழக்கறிஞர் சீன் தேஹ் கூறினார்.

குற்றவாளி முதலில் தனது மேம்படுத்தப்பட்ட ஸ்பார்க்லர் வெடிகுண்டுகளை வெளியே எடுத்து, அவற்றை ஒரு புல்வெளியில் வைத்து பற்றவைத்து பார்த்தார். ஆனால் அவை வெடிக்கவில்லை.

பின்னர் அவர் ஸ்பார்க்லர் வெடிகுண்டுகளில் ஒன்றை எடுத்து ஒரு புல்வெளியை நோக்கி எறிந்தார், இதனால் அது தரையில்பட்டவுடன் வெடித்தது. இதனால் காயம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த நிகழ்வு அனைத்தையும் தனது மொபைல் ஃபோனில் பதிவுசெய்து , அந்த வீடியோ கிளிப்பை தனது இன்ஸ்டாகிராமிலும் அவர் பதிவிட்டுள்ளார். இதையே ஆதாரமாக வைத்து போலீசார் அந்த மாணவரை அவரது வீட்டில் கைது செய்தனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts