TamilSaaga

சிங்கப்பூரில் இருக்கும் பாவமான கணவரா நீங்க…. மனைவி கோபத்தில் வச்சு தாளிக்கிறாங்களா… இந்த இரண்டு வார்த்தையை மட்டும் சொல்லிடாதீங்க… இதில் இன்னொரு விஷயம் கூட இருக்கு…

கடல் கடந்து வந்து சிங்கப்பூரில் வேலை செய்து வரும் கணவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை மனைவி மற்றும் குடும்பத்தை பிரிந்து இருப்பது தான். என்னத்தான் கணவனை பிரிந்த கஷ்டம் இருந்தால் கூட எப்போதுமே வா ஃப்லீங்கா பேச முடியும். அப்போ அப்போ சண்டைகளும் வரும் தானே. அப்படி உங்க மனைவி காண்டாகி கத்துறப்ப அவங்களிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதற்கான சூப்பர் வழிகள் தான் இப்போ சொல்லப்போறோம்.

என் பொண்டாட்டி செம கோபக்காரினு 10ல 7 ஆண்கள் கண்டிப்பாக தங்கள் நண்பர்களிடம் சொல்லிடுவாங்க. நீங்க தப்பு செய்றப்ப அவங்க கோபத்தில கத்துனா உடனே போனை வச்சிடக்கூடாது. டீச்சரிடம் கை கட்டி நிற்கும் மாணவன் போல பொறுமைய திட்ட வாங்கிக்கோங்க. வேற வழி இல்ல!

சில மனைவிகள் அமைதியாக கணவர் திட்டை வாங்கிக்கொள்ள துவங்கியதுமே அவர்களும் மெதுமெதுவாக சண்டையை குறைத்து கொள்வார்கள். அதைப்போல, சண்டையிடும் உங்க மனைவி என்ன பேசுனா? சரியாவாங்க என்பதை விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பதும் இதற்கு செம தீர்வாக இருக்கும். பொண்ணுங்கல புரிஞ்சிக்க முடியலனு டயலாக் விட்டா உங்க பாடு திண்டாட்டம் தான்!

’அமைதியா இரு’ என்ற வார்த்தையை மட்டும் சொல்லியே விடாதீர்கள். அது அவங்க இருக்க கோபத்துல மேலும் எண்ணெய்யை ஊத்துனா மாதிரி ஆகிடும். இது கொஞ்சம் கஷ்டம் தான். உங்க மீது தவறே இல்லை என்றால் கூட மனைவி தானே. அப்படியே ஒரு மன்னிப்பை போட்டு சரண்டர் ஆகுவதும் சிறந்தது தான். அவங்க தான் சோறு கூடுக்கணும் மறந்துராதீங்க!

கோபத்தில் நீ எப்படி அந்த வார்த்தை சொல்லலாம் என்ற நீங்களும் சண்டையை தொடங்காதீர்கள். கோபமாக இருக்கும் போது சிலருக்கு அவர்கள் என்ன பேசுகிறோம் எனக் கூட தெரியாது என்கிறது ஒரு ஆய்வு. நமக்கு ரொம்ப பிடிச்சவங்கட்ட கன்னாபின்னாவென கத்திவிட்டு அப்படியா நானாப்பா சொன்னேனு கூட கேட்பாங்க. சண்டையில திட்டுறத மனதில வச்சிட்டே இருக்காதீங்க.

ஆண்கள் மாதிரி இல்லாமல் பெண்கள் சிலர் வீட்டை கவனித்து அலுவலக வேலையும் பார்த்து கொள்வதால் அதுவே அவர்களுக்கு மன அழுத்ததை கொடுக்கும். இதை அவர்கள் துணையாக நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். வெகுதூரத்தில் இருக்கும் நீங்கள் அவர்களை புரிந்து கொண்டு சற்று நேரம் அமைதி காத்தாலே அவர்கள் கோபம் சட்டென குறைந்து விடும்.

நெக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் உங்கள் மனைவிக்கு எதுவும் கிப்ட்டை அடிக்கடி இல்லையென்றாலும் சில மாதங்களுக்கு ஒருமுறை கொடுப்பதை வழக்கமாக வைத்திருங்கள். இது பல மைல் தூரம் இருக்கும் கணவர் தன்னை மறக்கவே இல்லை என்பதை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்க உதவும்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts