TamilSaaga

Exclusive: VTL மூலம் “வெற்றிகரமான” சிங்கப்பூர் பயணம் – Travel அனுபவங்களை புட்டு புட்டு வைக்கும் கறம்பக்குடி தில்மணி

கறம்பக்குடியைச் சேர்ந்த தில்மணி என்பவர் vaccinated travel lanes (VTL) மூலம் சிங்கப்பூர் வந்தடைந்துள்ளார். அவர் தனது பயணத்தில் ஏற்பட்ட அனுபவங்களை நமது Tamil Saaga-வுடன் பகிர்ந்துள்ளார்.

முதலில், தனக்கு கோவிட் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான Ip, green bond, covid insurance போன்ற முக்கிய ஆவணங்களை தனது சார்பில், தன்னுடைய கம்பெனியே அரசிற்கு அனுப்பி விட்டதாக தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து கிளம்புவதற்கு முன்பாக எடுக்க வேண்டிய முக்கியமான பரிசோதனை 48 மணி நேரத்திற்கு உள்ளான PCR test ஆகும். இவருக்கு திருச்சியில் உள்ள நந்தனா டிராவல்ஸ் அனைத்து வகையான பரிசோதனைகளையும் மேற்கொண்டு ஆவணங்களை தயார் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க – “2022 புத்தாண்டு பரிசு” – திருச்சி விமான நிலையத்துக்கு காத்திருக்கும் “சர்பிரைஸ்” அறிவிப்பு

சென்னையில் இருந்து இரவு சுமார் 12 மணி அளவில் விமானம் கிளம்பியுள்ளது. சென்னையில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்ததாக தெரிவித்தார். போர்டிங் பாஸ் பெறுவது முதல் விமானத்திற்குள் நுழையும் வரை மிகவும் தீவிரமாக பயணிகள் கண்காணிக்கப்பட்டதாகவும், இமிக்ரேஷனில், மீண்டும் ஒரு முறை, பயணிகள் vaccinated travel lanes மூலம் சிங்கப்பூர் பயணிப்பதற்கு தேவையான ஆவணங்கள் இருக்கின்றனவா என்று சோதிக்கப்பட்டதாகவும், அதன் பிறகே விமானத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். சமூக இடைவெளி போன்ற அனைத்து வகையான பாதுகாப்பு யுக்திகளையும் அதிகாரிகள் கையாண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

காலை 6:10 அளவில் சிங்கப்பூரில் தரை இறங்கியவுடன், முதலில் இமிக்ரேஷனிற்கு சென்ற பிறகு தங்களது லக்கேஜ்ஜை எடுத்துக்கொண்டவுடன் swab டெஸ்ட் செய்யப்படுவதாக தெரிவித்தார். VTL முறையில் பயணிப்பவர்களுக்கு என்று தனியாக ஏற்படுத்தப்பட்ட வழியில் செல்வதால், வெறும் 30 நிமிடத்திற்குள் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததாக தெரிவித்தார். விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வழிகள் யாவும் ஒரு வழி சாலைகளாக அமைந்துள்ளதால் நாம் பயணிக்கவிருக்கும் வாகனத்தை வர வேண்டிய இடத்திற்கு சரியாக வர சொல்லி விட்டோம் என்றால் நமக்கு எவ்வித பிரச்சனையும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு வாகனம் நம்மை அழைத்துச் சென்ற பிறகு, அந்த இடத்தில் நம்முடைய பரிசோதனை முடிவுகள் நெகட்டிவாக வந்தால் அதே இடத்தில் ஒரு நாள் தங்க வைத்து, பிறகு மூன்றாம் நாள் ART டெஸ்ட் எடுக்க கூறுகிறார்கள். இந்தப் பரிசோதனை நெகட்டிவ் என்ற பட்சத்தில் இங்கிருந்து சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் வரை குவாரண்டைன் இருக்கச் சொல்கின்றனர். குவாரண்டைன் செய்வதற்காகவே சுமார் ஐந்து இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கம்பெனி மூலமாகவோ அல்லது ஏஜென்ட் மூலமாகவோ இந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பயணாளிகளுக்கு தேவையான உணவு, சோப், மாஸ்க், பிஸ்கட்ஸ், காபி போன்ற அனைத்து வகையான அத்தியாவசியமான பொருட்களும் அளிக்கப்படுகின்றன.

மேலும் படிக்க – துபாயில் நல்ல சம்பளத்தில் வேலை.. இண்டெர்வியூ தேதி அறிவிப்பு – முழு விவரம்

இந்த ஐந்து நாட்களுக்குள் பயணாளிகளுக்கு தேவையான அனைத்து வகையான இசிஜி எக்ஸ்ரே மற்றும் இதர பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு 5 ஆவது நாள், இவர்கள் மேற்கொண்ட அனைத்து பரிசோதனைகளும் கிரீன் ஆக வந்தால், தாங்கள் குவாரண்டைன் செய்யப்பட்ட இடத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர். மொத்தத்தில் எட்டு நாட்களுக்குள் வெளியேற அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

MOM முறையில் சிங்கப்பூருக்கு வருபவர்களுக்கு மட்டுமே இந்த முறையில் அனுமதி கிடைக்கின்றது. இதுவே பர்மிட் இருந்தால் அவர்கள் இரண்டாவது நாளே வேலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts