சிங்கப்பூர் : சிங்கப்பூரில் work permit, s pass ஆகியவை வைத்து பணியாற்ற முடியும். ஆனால் வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை, அதாவது PR (Permanent Resident) பெற வேண்டும் என்றால் அதற்கு சில குறிப்பிட்ட தகுதிகளை ICA (Immigration & Checkpoints Authority ) விதித்துள்ளது.
PR பெற விண்ணபிப்பதற்கான தகுதிகள் :
- சிங்கப்பூர் குடிமகன் அல்லது சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்றவரின் கணவர் அல்லது மனைவியாக இருக்க வேண்டும்.
- சட்டப்படி திருமணம் செய்தவர்களுக்கு பிறந்தவராகவோ அல்லது அவர்களால் சட்டப்படி தத்தெடுக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.
- திருமணமாகாத, 21 வயதிற்கு கீழ் உள்ள பிள்ளையாக இருக்க வேண்டும்.
- சிங்கப்பூர் குடிமகனின் வயதான பெற்றோராக இருக்க வேண்டும்.
- சிங்கப்பூரில் Employment Pass அல்லது S Pass வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.
- சிங்கப்பூரில் படிக்கும் மாணவராக இருக்க வேண்டும்.
- சிங்கப்பூரில் தொழில் செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளராக இருக்க வேண்டும்.
PR பெறுவதற்கு apply செய்யும் முறை :
- e service மூலமாக சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்றவரின் அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும். அல்லது விண்ணப்பதாரர் ஆன்லைவில் விண்ணப்ப படிவத்தை download செய்து சமர்பிக்க வேண்டும்.
- சிங்கப்பூர் குடிமகன் அல்லது PR பெற்றவர் தங்களின் மனைவி அல்லது திருமணமாகாத 21 வயதிற்கு கீழ் உள்ள பிள்ளைக்காக விண்ணப்பிக்கலாம்.
- சிங்கப்பூர் குடிமகன் தங்களின் வயதான பெற்றோருக்காக PR க்கு விண்ணப்பம் செய்யலாம்.
- Employment Pass அல்லது S Pass வைத்திருப்பவர் தனக்காகவோ அல்லது திருமணமாகாத 21 வயதிற்கு கீழ் உள்ள தன்னுடைய பிள்ளைக்காகவோ PR க்கு விண்ணப்பம் செய்யலாம்.
- நீங்கள் சிங்கப்பூரில் படிக்கும் மாணவராக இருந்தால் e service மூலமாக உங்களின் FIN அல்லது செல்லத்தக்க immigration pass வைத்து அதன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்.
- நீங்கள் சிங்கப்பூரில் தொழில் செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளராக இருந்தால், Global Investor Programme கீழ் Singapore Economic Development Board வழியாக PR க்கு விண்ணப்பம் செய்யலாம்.
- PR க்கு விண்ணப்பம் செய்யவதற்கு ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் 100 சிங்கப்பூர் டாலர்கள் கட்டணமாக செலுத்த வேண்டும். இது திரும்ப தரப்பட மாட்டாது.
கட்டண விபரம் :
ICA அலுவலகத்தில் உங்களில் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டால் PR நடைமுறைகள் முடித்த பிறகு,
- Entry Permit க்கு 20 சிங்கப்பூர் டாலர்கள் செலுத்த வேண்டும்.
- 5 வருடத்திற்கு பிறகு வரும் Re-Entry Permit க்கு 50 டாலர் செலுத்த வேண்டும்.
- Identity Card பெற 50 டாலர் செலுத்த வேண்டும்.
- வெளிநாட்டு விசா பெற்றுவதற்கு 30 டாலர் பெற வேண்டும்.
PR விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு குறைபட்சம் 6 மாதங்கள் ஆகும். சில விண்ணப்பங்கள் கூடுதல் கால அவகாசம் கூட ஆகலாம். MyICA வழியாக PR விண்ணப்பம் குறித்த நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். உங்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டால் உங்களுக்கு இமெயில் அல்லது போஸ்ட் வழியாக தகவல் தெரிவிக்கப்படும்.