TamilSaaga

சிங்கப்பூரில் உங்களுடைய வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை மாற்ற வேண்டுமா இதோ வழிமுறைகள்

சிங்கப்பூர் அரசு வெளிநாட்டிலிருந்து தொழில் ரீதியாக அந்நாட்டுக்கு குடியேறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 12 மாதங்கள் வரை வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் வைத்து வாகனங்களை இயக்கலாம். அதற்கு மேல் அவர்களுடைய வெளிநாட்டு ஓட்டுனர் உரிமத்தை சிங்கப்பூருக்கு மாற்றி அமைக்க வேண்டும். சிங்கப்பூருக்கு வெளிநாட்டிலிருந்து வேலைக்கு வருபவர்கள் அல்லது தொழில் முனைவோர்கள் என பலர் ஒவ்வொரு ஆண்டும் வந்து கொண்டிருக்கின்றனர். அவ்வாறு வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தேவையான வசதிகளையும் மற்றும் வழிமுறைகளையும் அளித்திருக்கிறது. இவ்வகையில் ஓட்டுநர் உரிமம் பற்றியும் அதனை மாற்றி அமைப்பது பற்றியும் இந்த பதிவில் விவரமாக பார்ப்போம்.

சிங்கப்பூர் அரசு சாலை பாதுகாப்பு விஷயத்தில் பெரும் கவனம் செலுத்துகிறது. அதனால் கடுமையான நெறிமுறைகளை ஓட்டுநர்களுக்கு அளித்திருக்கிறது, ஏனென்றால் இதன் மூலமே சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுக்க முடியும். உலகில் வெகு சில நாடுகளே ஓட்டுனர்களின் திறமைக்கேற்ப பாயிண்ட்ஸ் வழங்கப்படுகிறது. அந்த ஓட்டுநர் ஏதேனும் விபத்துகளை ஏற்படுத்துவதால் அவர்களுடைய பாட்டுகள் குறையும். இது போன்ற திட்டம் சிங்கப்பூரில் அமலில் உள்ளது. எனவே சிங்கப்பூரில் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

நீங்கள் வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு அண்மையில் வேலை நிமித்தமாக அல்லது நிரந்தரமாக குடியேற வந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய வெளிநாட்டு ஓட்டுனர் உரிமத்தை கூடிய விரைவில் சிங்கப்பூருக்கு மாற்றி வைக்க வேண்டும். வெளிநாட்டு ஓட்டுனர் உரிமத்தை வைத்து உங்களால் 12 மாதங்கள் வாகனங்களை இயக்க முடியும் எனினும் கூடிய விரைவில் மாற்றி அமைப்பது உங்களுக்கு நல்லது. இவ்வாறு மாற்றி அமைக்க என்னென்ன செய்ய வேண்டும் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்பதை பார்ப்போம்.

முதலில் யார் இந்த வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்த முடியும் என்பதை பார்க்கலாம். வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை வைத்து பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே வாகனங்களை இயக்க முடியும். DP மற்றும் Work Pass வைத்திருப்பவர்கள் இந்த வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பயன்படுத்தலாம். உங்களுடைய வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் 3A, 3, 2B என்ற வகுப்புகளில் கீழ் உள்ளது என்றால் அதை நீங்கள் 12 மாதங்கள் பயன்படுத்தலாம்.

உங்களுடைய வெளிநாட்டு ஓட்டுனர் உரிமத்தை மாற்றி அமைக்க முதலில் நீங்கள் எடுக்க வேண்டியது பேசிக் தியரி டெஸ்ட் (BTT) என்னும் தேர்வை எடுக்க வேண்டும். இந்த தேர்வை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் எடுக்கலாம். இந்தத் தேர்வை எடுக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். முதலில் நீங்கள் Traffic Police Test Centre counter -ஐ நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் போது நீங்கள் எடுத்த செல்ல வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு, NRIC-ன் அசல் மற்றும் நகல்களையும், எம்ப்ளாய்மெண்ட் பாஸ், DP, சோசியல் விசிட் பாஸ் அல்லது உங்களுடைய வொர்க் பர்பெக்ட் ஆகியவை எடுத்துச் செல்ல வேண்டும். உங்களுடைய வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்ல வேண்டும். இதனோடு உங்களுடைய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு ஆகும் செலவு 50 SGD. நீங்கள் உங்களுடைய வெளிநாட்டு ஓட்டுனர் உரிமத்தை விண்ணப்பித்து மாற்றி அமைக்க விண்ணப்பித்திருந்தால், உங்களுடைய விண்ணப்பத்தின் நிலையை ட்ராபிக் போலீஸ் இணையதளத்தில் பார்க்கலாம்.

நீங்கள் சிங்கப்பூருக்கு உங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை மாற்றி அமைத்த பின் பெறப்பட்ட ஓட்டுனர் உரிமம் ஐந்து ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அதன் பிறகு செல்லுபடி ஆகும் 5 ஆண்டுகள் முடிவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நீங்கள் அதை புதுப்பிக்க வேண்டும். மறுபடியும் புதுப்பிக்க நீங்கள் வாகன ஓட்டுதலில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போது எப்படி ஓட்டுநர் உரிமத்தை மாற்றி அமைப்பது என்பதை பார்த்தோம். மேலும் சிங்கப்பூரில் என்னென்ன மாதிரி ஓட்டுநர் உரிமம் என்றும் என்னென்ன வகையில் உங்களுக்கு வரும் என்பதை பார்க்கலாம்.

சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமத்தில் கீழ் காணும் வகைகளில் பிரித்து வைத்திருக்கின்றனர். Class 1, Class 2, 2A & 2B, Class 3, 3A, 3CA & 3C, Class 4A மற்றும் Class 4 & 5 என வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். இதில் Class 1 உடல் ஊனமுற்றவர்களுக்கான ஓட்டுனர் உரிமம் ஆகும். Class 2, 2A & 2B இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கான ஓட்டுனர் உரிமமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. Class 3, 3A, 3CA & 3C கார்களுக்கும், Class 4A பஸ்களும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. Class 4 & 5 கனரக வாகனங்கள் மற்றும் வேன்களை இயக்குவதற்கான உரிமமாக கருதப்படுகிறது.

இது மட்டும் இன்றி ஓட்டுநர்களையும் மூன்று வகைகளாக பிரித்து வைத்திருக்கின்றனர். முதல் வகை Provisional Driving உரிமம் பெற்றவர்கள், முறையாக ஓட்டுனர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று BTT தேர்வை முடித்தவர்கள் இரண்டாவது Qualified Driving உரிமம் பெற்றவர்கள் ப்ராக்டிகல் டிரைவிங் டெஸ்ட் முடித்து ஓராண்டு கால சோதனையில் இருப்பவர்கள். கடைசியாக Vocational Driving பெற்றவர்கள் தனியார் வாடகை டாக்ஸிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் ஆவர். சிங்கப்பூரின் ஓட்டுனர் உரிமத்தை பற்றி அறிந்திருப்பீர்கள், இது வைத்து நீங்கள் எது போன்ற வகையில் ஓட்டுனர் உரிமத்தை பெற வேண்டும் என்பது பற்றியும் அறிந்திருப்பீர்கள்.

சிங்கப்பூரில் Bukit Batok Driving சென்டர், ComfortDelGro ஓட்டுநர் மையம் மற்றும் Singapore Safety Driving மையம் ஆகிய ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் இருக்கிறது. இதில் நீங்கள் நம்பகத்தன்மை உள்ள பயிற்சி பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதன் வாயிலாக உங்களுக்கு தேவையான சேவையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு சிங்கப்பூர் டிராபிக் போலீஸ் இணையதளத்தை பார்க்கவும்.

Related posts