TamilSaaga

சிங்கப்பூரில் வேலைத் தேடி.. வடிகால் வழியாக ஊர்ந்து சென்றே கட்டுமானத் தளத்திற்குள் நுழைந்த நபர் – வசமாக சிக்கிய சம்பவம்

வாழ்க்கையில் வேலையின்மை ஒருவரை எந்தளவுக்கு கொண்டுச் செல்லும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

வியட்நாமைச் சேர்ந்த 28 வயது நபர் Dang Huu Giang என்பவர் இந்த ஆண்டு மார்ச் 25-ம் தேதி மதியம் 2 மணியளவில், சிங்கப்பூர் நில ஆணையத்திற்குச் சொந்தமான கட்டிடமான 9 ஸ்டேடியம் லிங்கில் உள்ள கட்டுமானத் தளத்திற்கு வடிகால் வழியாக ஊர்ந்து சென்றிருக்கிறார். இது முந்தைய காலாங் விமான நிலையம் இருந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையக் கட்டிடத்தில் வேலி அமைக்கப்பட்ட கட்டுமானப் பகுதியைக் கண்டபோது, Work Permit காலாவதியாகிவிட்ட போதிலும், வேலை தேடுவதற்காக வடிகால் வழியாக ஊர்ந்து சென்றதை நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க – ஏழரை மாத சிசுவாக இருந்த சிங்கப்பூர் குடிமகனுக்கு “இந்திய குடியுரிமை” – விடாமல் போராடி இந்திய அரசை வென்ற “சிங்கையின் மைந்தன்”

பிறகு அந்த நபர் அங்கு சிறுநீர் கழித்துவிட்டு, அங்கிருந்த சீரமைப்பு பணிகளை மேற்பார்வையிடும் திட்ட மேலாளரையும் தாக்கியிருக்கிறார். அந்த மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு வந்தது.

அதுமட்டுமின்றி, கடந்த மார்ச் 9ம் தேதி 7-11 கடையிலிருந்து ‘ரெட் புல்’ (Red Bull) பானத்தை திருடியுள்ளார். இரண்டு குற்றங்களையும் செய்ததற்காக Dang-கிற்கு இரண்டு வார சிறைத் தண்டனை மற்றும் 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts