TamilSaaga

“இவரு தானா அந்த மச்சக்காரன்” : எல்லாரையும் காதலிச்சு தான் கல்யாணம் செய்தேன்! – 8 மனைவிகளோடு ஒரே வீட்டில் வாழும் ரியல் “ரோமியோ”

“வீட்டைக் கட்டிப்பார் கல்யாணம் நடத்திப்பார்”, இந்த பழமொழியை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. காரணம் ஒரு வீட்டை கட்டி முடிப்பது எந்தளவுக்கு கடினமோ அதே அளவுக்கு கடினம் தான் ஒரு திருமணத்தையும் நடத்தி முடிப்பது. சரி கல்யாணம் முடிந்துவிட்டது அடுத்து என்ன?. கல்யாணத்திற்கு பிறகு கணவன் மனைவி என்ற வாழ்க்கை தொடங்குகிறது. இன்றைய சூழலில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்கள் திருமணம் செய்து மனைவிக்காகவும் குடும்பத்திற்காகவும் மிக கடினமாக உழைத்து வருகின்றனர். இந்த காலகட்டத்தில் இருவரும் வேலைக்கு சென்றால் மட்டுமே வாழ்க்கை நகரும்.

“இனி எந்த கவலையும் வேண்டாம்” : Changi Airportன் மூன்று புதிய முன்னெடுப்புகள்” : பயனடையப்போவது யார் தெரியுமா?

சரி இது ஒருபுறம் இருக்கட்டும், திருமண வாழ்க்கையில் ஒரு மனைவியை வைத்தே காலத்தை நகர்த்துவது கடினமாகி விட்ட இந்த காலகட்டத்தில் ஒரு “ரோமியோ” எட்டு பெண்களை மணந்து, அவர்கள் எட்டு பேரையும் ஒரே வீட்டில் குடியமர்த்தி வாழ்ந்து வரும் அதிசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. யாருப்பா அந்த ரோமியோ எனக்கே அவரை பார்க்கணும் போல இருக்குனு சொல்லும் மக்களே அவர் பெயர் தான் ஓங் டாங் போரூட் பாங்காக் நகரை சேர்ந்த ஒரு டாட்டூ கலைஞர் தான் இவர்.

போரூட் மணந்த எட்டு பெண்களையும் காதலித்து தான் திருமணம் செய்துள்ளார், அதேபோல இந்த எட்டு பேரும் எந்தவிதமான சண்டை சச்சரவுகள் இல்லாமல் அவரை காதலித்து திருமண செய்து ஒரே வீட்டில் சந்தோஷமாக வாழ்கின்றனர். நம்ம கமல் சார் வேட்டையாடு விளையாடு பாணியில் தான் முதல் திருமணம் நடந்துள்ளது. தனது முதல் மனைவியை கண்டதும் காதலித்து திருமணம் செய்துள்ளார், வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் தனது இரண்டாவது மனைவி அதே பாணியில் காதலித்து தனக்கு முதல் மனைவி உள்ளார் என்று கூறி திருமண செய்துள்ளார்.

அடுத்தபடியாக மூன்றாவது மனைவியை சந்தித்தது மருத்துவமனையில் என்று கூறும் அந்த ரோமியோ முறையே நான்கு ஐந்து மற்றும் ஆறாவது மனைவிகளை சோசியல் மீடியா வழியாக காதலித்து தேர்ந்தெடுத்துள்ளார். ஒரு மனைவி இன்ஸ்டாகிராம் மற்றொரு மனைவி பேஸ்புக் மற்றொரு மனைவி TikTok என்று வரிசையாக அனைவரையும் காதலித்து, தனது முந்தய மாணவர்களை பற்றி தெளிவாக எடுத்துரைத்து திருமணம் செய்துள்ளார்.

ஏழாவது மனைவியை தன் தாயுடன் கோவிலுக்கு சென்ற நேரத்தில் கண்டுள்ளார், மீண்டும் கண்டதும் காதல் அவரைப் பார்த்ததும் எனக்கு ஆறு மனைவிகள் உள்ளனர் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா என்று ஓப்பனாகவே கேட்டு விட்டாராம். அவரும் இந்த ரோமியோ மேல் ஆசை கொண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இறுதியில் ஒரு நாள் லீவுக்கு பீச்சுக்கு சென்று பொழுதுதான் இறுதியாகத் தனது எட்டாவது மனைவியை சந்தித்துள்ளார் அப்பொழுது போரூட்டின் நான்கு மனைவிகளும் அவர் கூடவே இருந்துள்ளனர் என்பது தான் இங்கே ஹைலைட்.

“இது மிகவும் தைரியமான நடவடிக்கை” : இந்திய பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்த சிங்கப்பூர் வணிக தலைவர்கள்

நான்கு மனைவிகளோடு சென்று தனது எட்டாவது மனைவி காதலிப்பதாக கூறி அவரையும் திருமணம் செய்து தற்போது 8 பேருக்கு கணவராக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்த எட்டு மனைவிகளும் அவரிடம் மிகவும் ஜாலியாக தான் பழகி வருகின்றனர். 8 பேரிடமும் எந்தவிதமான பிரிவினையும் இல்லை அவர்கள் 8 பேரையும் ஒன்று போல தான் நடத்தி வருகிறார் போரூட். அனைவருமே வேலைக்கு செல்கின்றனர், வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அனைவருடனும் நேரத்தை செலவிடுகிறார். மேலும் அன்று யாருடன் உறங்க வேண்டும் என்பதை shift போட்டு தூங்குகிறார் இந்த டிஜிட்டல் ரோமியோ.

ஒரு மனைவிக்கே நாக்கு தள்ளுதுப்பா என்று பல கணவன்மார்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் இவரை பார்க்கின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts