TamilSaaga

ஆஸ்திரேலிய பெண் “அமெண்டா” தஞ்சாவூர் மருமகள் ஆனது எப்படி? சிங்கப்பூரில் “தீயா வேலை செய்த” ஊழியர்!

சிங்கப்பூர் மாப்பிள்ளை ஆஸ்திரேலியா மணமகள் காதல் கைகூடுமா? பாகம் – 2

சிங்கப்பூரில் பணிபுரியும் தமிழ் பட்டதாரி.. ஆஸ்திரேலிய மனைவி – உலுக்கும் உண்மை சம்பவம் – பாகம் 1 இங்கே

பாகம் 2 தொடர்கிறது…

இளங்கோவனின் திருமணம் ஏற்கனவே ஒரு சலசலப்பை, ஒரு அதிர்வை கிராமத்து மக்களிடையே, அவர்களது இனத்தார் இடையே உண்டாக்கி இருக்க, செல்வராஜின் கதையோ இன்னும் தீவிரமானதாக இருந்தது. காரணம் இளங்கோவனாவது வேறு இனத்தைச் சேர்ந்த பெண்ணைத்தான் காதலித்தார். செல்வராஜூவோ இனம், நாடு, மொழி, எல்லாம் தாண்டி முற்றிலும் மாறுபட்ட கலாச்சார பின்னணியில் இருந்து வருகிற ஆஸ்திரேலிய பெண்ணை காதலிக்கிறார்.

ஒரு வழியாக செல்வராஜன் பெற்றோர் அதை அறிய வந்தபோது, இளங்கோவனின் பெற்றோர் என்ன மாதிரியான முயற்சிகளை எல்லாம் கையாண்டு தங்கள் மகனை சரிப்படுத்த முயன்றார்களோ அதே முயற்சிகளை செல்வராஜன் பெற்றோரும் மேற்கொண்டனர்.

ஆனால் இளங்கோவனை போலல்லாமல் செல்வராஜன் படிப்பும், அவரது அனுபவ அறிவும் அவரை நிதானமாக இயங்கச் செய்தன. விளைவு தங்களது மகனின் மனத்தை மாற்றவே முடியாது என பெற்றோர் உணர்ந்து கொண்டனர். இறுதியில் திருமணத்திற்கு சம்மதமும் தெரிவித்து விட்டனர். ஆனால் இந்த சம்மதம் வெறுமனே திருமணத்திற்கான சம்மதம் மட்டுமல்ல.மாறாக பல்வேறு சிக்கலான, நீண்ட நிகழ்வுகள், சடங்குகளின் ஒரு ஆரம்பம் தான்.

“சிங்கப்பூர் TPE Slip சாலை” : மரத்தில் வேகமாக மோதிய SBS Transit, 6 பேருக்கு காயம் – இருக்கையில் சிக்கிய ஓட்டுநர்

ஆம் செல்வராஜின் பல ஆண்டு முயற்சிக்கு பலனாக, திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த பிறகு தான் ஆரம்பித்தது கூட்டுக் குடும்பம், சாதி, திருமணத்தின் முக்கிய சடங்குகள், பாரம்பரியம், குடும்ப வாரிசு போன்றவைகள் தொடர்பான புதிய பேச்சுவார்த்தைகள் !

பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருந்து, அங்கேயே வேலை செய்தாலும் கூட – திருமணம் என்று வரும்போது மகன்களை பெற்ற பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் கிராமத்தில், தங்களின் மக்களிடையே தான் பெண் எடுக்க விரும்புகிறார்கள். மிகப்பெரும்பாலான திருமணங்களும் அப்படித்தான் நடக்கின்றன. இதற்கு இரண்டு விதமான முக்கிய காரணங்கள் சொல்லப்படுகிறது .

ஒன்று தங்களது இனத்தின், சாதியின், சமூகத்தின், தொடர்ச்சி இதனால் பாதிக்கப்படாமல் இருக்கும் என்பது.

இன்னொன்று தாங்கள் வெளிநாடுகளில் வந்து சம்பாதித்து, வசதியாக வாழ ஆரம்பித்த பிறகும், இன்றும் கிராமங்களில் துன்புற்று கொண்டிருக்கிற தங்களது இனத்தை சார்ந்த மற்றவர்களுக்கு, அவர்களது வீடுகளில் இருந்து பெண்கள் எடுக்கும் பொழுது, அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த முடியும் என்னும் பரந்த சிந்தனை.

உண்மையிலேயே ஆழ்ந்து பார்க்கும் பொழுது இது ஒரு மிகச்சிறப்பான, மிகச்சரியான, சமூகத்தின் பொருளாதார ஏற்றத்தாழ்வை உடைக்கக்கூடிய ஒரு உளியாக இருப்பதை உணர முடியும்.

இவ்வாறு திருமணம் என்பதை வெறுமனே ஒரு தனிப்பட்ட குடும்ப நிகழ்வாக மட்டுமன்றி, ஒரு சமூகத்தின் சாரத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் மாபெரும் நிகழ்வாக பார்த்து பழகிய சூரப்பள்ளம் கிராம மக்களுக்கும், செல்வராஜின் பெற்றோருக்கும் இந்த திருமணம் பல கேள்விகளையும், விவாதங்களையும், உண்டாக்கியது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதானே!

முசுகுந்த வேளாளர் திருமணங்களைப் பொருத்தவரை, திருமணச் சடங்குகளை சில நாட்களுக்கு முன்பிருந்தே இரு குடும்பத்தின் பொதுவான உறவினர்களும் இணைந்து செய்யும் வழக்கம் உண்டு. பெரும்பாலும் மணமகன், மணமகள், இருவரும் ஏறக்குறைய ஒரே கிராமம் அல்லது ஒரே சமூகத்தை சார்ந்தவர்களாகவே அமைவதால் உறவினர்களுக்கும் பஞ்சமே இருக்காது. அந்த சடங்குகளும் மிகவும் கலகலப்பாக, ஊரே கூடி திருவிழா போல நடக்கும்.

ஆனால் இந்த திருமணத்தில் மணமகளே ஒரு வெளிநாட்டுப் பெண்! அதிக அளவில் உறவினர்களும் வர முடியாது! மணமகளோடு அவரது ஒரு சகோதரர், அவரது மைத்துனர், மற்றும் மணமகளின் நெருங்கிய ஆண் நண்பர் இவர்கள் நான்கு பேர் மட்டுமே இந்தியாவிற்கு வந்தனர். இதுவே கிராமத்தினருக்கு பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. மணமகளின் உறவினர்கள் இல்லாமல் எப்படி முக்கியமான திருமண சடங்குகளை நடத்துவது?

அங்கிருந்து ஆரம்பித்தது முதல் பிரச்சனை ?! என்ன செய்வது உறவினர்கள் செய்ய வேண்டிய சடங்குகளை யார் செய்வது !? செல்வராஜ்க்கும் குடும்பத்தினருக்கும் ஆரம்பித்தது விவாதம். முதல் சடங்குக்கே மிக நீண்ட விவாதத்திற்குப் பிறகு மணமகனின் உறவினர்கள் மற்றும் கிராமத்தின் உறவினர்கள் மணமகளுக்கு உறவின் முறை வரக்கூடியவர்கள் மணமகளின் உறவினர்களை போல செயல்படுவது அதாவது ஏறக்குறைய மணமகளுக்கு உறவினர் கதாபாத்திரங்களை ஏற்று சடங்குகளை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. மணமகனின் தாய் வழி அத்தைகள், அவரது மைத்துனர், அவரது தாய் வழியில் வரக்கூடிய ஆண் உறவினர்கள், இவர்களெல்லாம் ஆஸ்திரேலிய மணமகனுக்கு உறவினர்களாக நியமிக்கப்பட்டு, ஐந்து நாள் திருமணத்தின் முக்கிய சடங்குகளை செய்யலாம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.

“சிங்கப்பூர் Construction துறை”, பலவிதமான வேலைவாய்ப்புகள் – முன் அனுபவம் உள்ளவர்கள் உடனடியாக Apply செய்யலாம்

முதல் சடங்கு வயதில் மூத்த சுமங்கலி அத்தைகள் மணப்பெண்ணுக்கு ஒரு சடங்கு குளியல் நடத்துவது. ஒருவழியாக மணமகளுக்கு உள்ளூர் உறவினர்கள் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டதால் இந்த சடங்கு சுமூகமாக முடிந்துவிட்டது.

இதற்கு ஒரு நாள் கழித்து, திருமணத்தின் மிக முக்கிய சடங்கு -மணமகளை கிராமத்திற்கு வரவேற்பது !

இந்த சடங்கின் முதல்பாதி மணமகளின் வீட்டில் பல முக்கிய நிகழ்வுகளை உள்ளடக்கியது.ஆனால் இங்கு மணமகள் வீடு என்று எதுவும் கிடையாது ! சொல்லப்போனால் மணமகள் இந்த நாட்டை சேர்ந்தவரே கிடையாது .

என்ன செய்வது? மீண்டும் பல்வேறு சலசலப்புகளுக்கு மத்தியில் அருகிலுள்ள ஒரு விடுதி அறையும், திருமண மண்டபமும் வாடகைக்கு எடுக்கலாம் என் முடிவு செய்யப்பட்டு,அதன்படியே அங்கே மணமகள் வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகள் செய்யப்பட்டு, மணமகள் மணமகன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். அங்கே அந்த சடங்கின் இரண்டாம் பாதியான மணமகனின் உறவினர்களுக்கு மணமகளை உறவினர்கள் அறிமுகம் செய்து வைக்க வேண்டும். நல்லவேளையாக ஏற்கனவே யாரெல்லாம் பெண்ணின் உறவினர்களாக செயல்படவேண்டும் என குறிக்கப்பட்டு விட்டதால் அவர்களெல்லாம் ஆஸ்திரேலிய மணமகளை திட்டமிட்டபடியே அழைத்துச் சென்று மணமகனின் குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்து, முறைப்படி ஒப்படைக்க அந்த சடங்கும் நிறைவேறியது.

அடடே !

இன்னும் எத்தனை சடங்குகள் ?

எத்தனை பிரச்சினைகள் ?

எப்படித்தான் முடியும் இந்த திருமணம் ?

அதன் சாதக பாதகங்கள் என்னவாக இருக்கும் ?

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts