TamilSaaga

“சிங்கப்பூர் TPE Slip சாலை” : மரத்தில் வேகமாக மோதிய SBS Transit, 6 பேருக்கு காயம் – இருக்கையில் சிக்கிய ஓட்டுநர்

நேற்று கிறிஸ்துமஸ் தினத்தன்று சிங்கப்பூரில் SBS டிரான்சிட் பேருந்து ஒன்று மரத்தில் மோதியதில் 6 பேர் காயமடைந்தனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), நேற்று சனிக்கிழமை (டிசம்பர் 25) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து காலை 11 மணியளவில் தங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவித்தது. அந்த பேருந்து, தம்பைன்ஸ் விரைவுச் சாலையிலிருந்து கல்லங்-பயா லெபார் விரைவுச் சாலையை (KPE) நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது என்று SCDF தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் : சிங்கப்பூர் River Valley சாலையில் உள்ள பாரில் புதிய Omicron தொற்று குழுமம்

SCDF அதிகாரிகள் வந்து பார்த்தபோது, ​​40 வயதான ஓட்டுனர் இருக்கையில் சிக்கிக் கொண்டதையும், தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை என்பதையும் கண்டறிந்தனர். பின்னர் ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி அவரை மீட்டு, பின்னர் சிகிச்சைக்காக சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த மற்றவர்கள் செங்காங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

SBS Transitவிபத்தில் காயமடைந்தவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார். இதற்கிடையில், போலீஸ் விசாரணை நிலுவையில் உள்ள அந்த பஸ் கேப்டன் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட துன்பம் மற்றும் சிரமத்திற்கு பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts